ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மழையால் யாழில் பாதிப்பு, ...

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ், மாவட்டத்திலும் பெய்து வரும் அடை மழை காரணமாக இதுவரை 3180 குடும்பங்களைச் சேர்ந்த 10920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
மேலும் வெள்ளத்தால்
இடம்பெயர்ந்த 87 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 6 பொது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் வெள்ளத்தினால் 1212 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அத்துடன், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பன்ன வீதி, சண்டிலிப்பாய் ஆகிய வீதிகளில் சரிவு ஏற்படுவதற்கான அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், யாழ் அரச அதிபர் தெரிவித்தார்.


சாவகச்சேரி, மண்கும்பன், அல்லபிட்டி மற்றும் வேலனை ஆகிய பகுதி வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, மழைக் காரணமாக நெடுந்தீவு பகுதியில் கால்நடைகள் சில இறந்துள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு தொடர்பு கொண்டு மக்கள் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ், அரச அதிபர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக