ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஈழத்தமிழனும் நாடுகடந்த தமிழீழமும் ஒரு பார்வை மார்கண்டு தேவராஜா - சட்டப்பட்டதாரி (L.L.B )

1948 பெப்ரவரி 4 ல் பெறப்பட்ட இலங்கை சுதந்திரத்திற்கு, சமபங்கு செலுத்திய ஈழத்தமிழன் இன்று ஏலம் போன தமிழனாக புலமபெயர்ந்த நாடுகளிலே வாழ்கின்றான். புராண இதிகாச தத்துவநூல்களுக்கு வித்தகம் வகுத்த ஈழத்தமிழன், செத்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை. இதற்கு நடந்துமுடிந்த இலங்கை அரசின் அசுரதனத்திர்க்கு ஊதுகுழலாக செயல்படுகின்ற
ஈனத்தமிழர்களே பிறந்தநாட்டையும் பெற்றெடுத்த தாயையும் விற்று பிழைப்பதை நாளைய துக்கதினத்துடன் விட்டொழிந்து நல்ல தமிழனாக வாழ்ந்தால் நாடும் நாமும் உங்களை வாழ்த்துவோம்.


உண்ண உணவும் உடுக்க உடையும் இவற்றிற்கெல்லாம் ஏற்ற ஒரு தொழிலும் இருந்தால் ஒரு சுதந்திரமான மனிதனாக வாழ்வான். இதை உலகறியும். சுதந்திர இலங்கையில் சுதந்திரமற்ற மனிதராக நாம் வாழுகின்றோம் என்பதை சொல்லும்போது நாம் தலைகுனிந்து வாழ்கின்றோம். தன்னிகரில்லா தனிப்பெரும்புகளை தமிழ் பேசும் நல்லுலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை பெற்ற ஈழத்தமிழா, உன்னை நீயே காப்பாற்ற வேண்டிய பெரும் கடமை இப்பொழுது உன்னை நாடிவந்திருக்கின்றது என்பதை நீ அறிவாய். உன் சமுகம் அறியும் உன்னால் எது முடியும் அதை நீ சிந்திப்பாயாக எனக்கு தெரிந்தவரை உங்களுக்கு சில விடயங்கள். 1948 பெப்ரவரி மாதம் 4 ம் திகதி நடு இரவில் வெள்ளைக்காரர்களால் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. சுதந்திர இலங்கையில் முதல் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் திட்டமிட்ட சிங்கள ஏகாதிபத்தியம் தனது செயலை திறம்பட செயல்படுத்தியதை இப்பொழுதாவது உணர்வாயாக அன்றில் இருந்து இன்று வரை இடம்பெற்ற சில விடயங்களை உங்கள் கவனத்திற்கு சுருக்கமாக சமர்ப்பிக்கின்றேன்.


இலங்கையில் ஆரம்ப அரசியல் அமைப்பில் நான்கு சட்டங்களை உள்ளடக்கியதாக அரசியல் சாசனம் வரையப்பட்டது. வரையப்பட்ட அந்த அரசியல் சாசனத்தில் முறையே 1 - தேசவழமைசட்டம் 2 - ரோமானியச்சட்டம் 3 - கண்டியாச்சட்டம் 4 - இஸ்லாமியச்சட்டம் இந்த நான்கு சுவர்களுக்குள் அமைக்கப்பட்ட இலங்கை அரசியல் அமைப்பு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து பௌத்த சாசன வழிகாட்டலின் கீழ் பல தசாப்த காலத்தை நினைவில் கொண்டு திட்டமிட்டு அப்பொழுதே இலங்கையின் சிங்கள தலைமை இலங்கையின் முதல் யனநாயக பாராளுமன்றத்தில் திட்டம் தீட்டப்பட்டது. இதை இலங்கை சுதந்திரத்திற்கு பாடுபட்ட தமிழ் தலைவர்கள் உணரவில்லை. போதிமரசு புத்தபிரானின் புனித தத்துவமான எறும்புக்கு கூட தீங்கு இளைக்காத புத்த தர்மம் இன்று எப்படி என்பதை உலகறியும். புத்த மதம் அல்லாதோர் இலங்கையில் உயர்பதவி வகிக்க முடியாது என்பதை அரசியல் அமைப்பு உறுதிபடுத்துகின்றது. சுதந்திரத்தின் பின் இடம்பெற்ற 10 பாராளுமன்ற தேர்தல்களும் எமக்கு தெளிவாக எடுத்துகாட்டி இருக்கின்றது. 1956 ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கை சுதந்திர கட்சி வெற்றி பெற்று சொலமன் டயஸ் பண்டாரநாயக்க பிரதமரானார். கிறிஸ்தவரான இவர் புத்த மதத்திற்கு மாறி S.W.R.D.பண்டாரநயாக என பெயர் மாற்றம் பெற்றார். இவர் செய்த முதல் காரியம் தனி சிங்கள சட்டத்தை அமுல்படுத்தி கண்டிய சட்டத்திற்கு உரமூட்டினார். அதன் பிறகு தனி பௌத்த நாடாக சிங்கள மொழி ஆட்சி மொழியாக பிரகடனம் பெற்றது.


என்று தனிச்சிங்கள சட்டம் பாராளுமன்றம் வந்ததோ அன்றே தமிழர்களுக்கு எதிரான சிங்களவரின் அடக்குமுறை ஆரம்பமானது. அக்காலகட்டத்தில் அரசு நிர்வாகம் அனைத்திலும் தமிழர்களே உயர் பதவி வகித்து வந்தார்கள். இதை சகிக்காமல் அரச பதவி வகிக்கும் அனைத்து தமிழர்களும் கட்டாய சிங்களம் கற்கவேண்டும் அல்லது தானாகவே பதவி விலக வேண்டுமென்று சிறப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அமுல்படுத்தினார். அப்பொழுதே தமிழர்களின் கல்வியை மழுங்கடிக்கும் நோக்குடன் கல்வி வெள்ளை அறிக்கையும் ஆரம்பமானது. அன்றுமுதல் எந்தெந்த வழிகளில் தமிழர்களின் கல்வி வளத்தை அழிக்க திட்டமிட்ட அரசு படிப்படியாக தனது காரியத்தை திரைமறைவிலே செய்ய ஆரம்பித்த அரசு படிப்படியாக சில சட்டங்களை பாராளுமன்றில் அமுல்படுத்தியது. 1977ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது தமிழ் மொழியையும் அரசகரும மொழியாக ஆக்குமாறு ஆரம்பித்த கோரிக்கையின் விளைவு காலிமுகத்திடலில் முதல் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது அதற்கு அப்போதைய ஆட்சியின் பாணந்துறை நாடாளுமன்ற உறுப்பினரான சிறில்மத்தியு அமிர்தலிங்கத்தின் தொலை உரித்து செருப்புத்தைப்பேன் என்று பாராளுமன்றத்திலே உரையாற்றினார். இலங்கையின் சுதந்திரத்திற்கு சமபங்கு வகித்த தமிழர் தனது மொழியை அரசுகரும மொழியாக்குவதற்கு தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான அமிர்தலிங்கம் அவர்கள் தனது தோலையே விலையாக கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்பொழுதே உருவானது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திட்டம் சிறப்பாகவே சிங்கள ஆட்சியாளர்களுக்கு கைகொடுத்தது.


சிங்களவர்களால் தமிழர்களுக்கு எந்தவொரு சிறுதீர்வும் கிடைக்காது என்பதால் தமிழ் இளைஞர்களிடையே பாரிய அரச எதிர்ப்பு நிலை படிப்படியாக உருவாகி ஆயுத போராட்டம் வரை சென்று தனித்து தமிழீழம்தான் தீர்வு என்று தமிழ் இளைஞர்களிடையே ஆயுத குழுக்கள் உருவம் பெற்றது. சுதந்திர கட்சி ஆட்சியின் பின்பு பதவியேற்ற ஐக்கிய தேசிய கட்சியின் J.R.ஜெயவர்த்தன அவர்கள் சிறப்பு சட்ட மூலங்கள் மூலம் அதிகாரம்கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை உருவாக்கினர். ஜனாதிபதி ஆட்சி முறையில் ஒரு சிறு திருத்தம் கொண்டு வருவதாக இருந்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெற்று பாராளுமன்றில் திருத்தம் கொண்டு வரலாம். தமிழர்களின் எஞ்சியிருந்த ஒருசில தகுதிகூட அதிகாரம் பெற்ற ஜனாதிபதி ஆட்சி பதவியால் பறிக்கப்பட்டது. அப்பொழுது இதை உணர்ந்த தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா கபட நாடகமாடி ஆயுதப்பயிட்சி கொடுத்து பல குழுக்களாக பிரித்து ஒருவரோடு ஒருவர் நெருங்காதபடி மூளைச்சலவை செய்யப்பட்டு பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் இயங்க ஆரம்பித்தன.


இதை உணர்ந்து கொண்ட J.R.ஜெயவர்த்தனா தமிழர்களின் பாரம்பரிய வடகிழக்கு இணைந்த சுமார் 22000 சதுர ஏக்கர் நிலப்பரப்பு சிங்கள கடும்போக்காளர்களின் ஏகோபித்த அனுசரணையுடன் பௌத்த ஆட்சிக்கு பௌத்த சாசன அமைச்சு உருவாக்கம் பெற்று தமிழர்களின் பரம்பலை சிதைக்க பௌத்த சட்டத்தின் கீழ் பல குடியேற்ற திட்டங்கள் திரை மறைவிலே ஆரம்பிக்கப்பட்டன. பௌத்த சாசன அமைச்சு அதன் முதல் கைங்கரியத்தை கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கஞ்சிகுடிச்சாறு எனும் அம்பாறை எல்லையை அண்டிய இடத்தில் ஒரு புத்த விகாரை கட்டப்பட்டு அந்த புத்த விகாரையில் ஒலிக்கின்ற மணியொலி எவ்வளவு தூரம் கேட்கின்றதோ அந்த எல்லைக்குட்பட்ட நிலமனைத்தும் பௌத்த விகாரைக்கே சொந்தமென்ற பௌத்த சாசன அமைச்சின் சிறப்பு சட்டத்தின் மூலம் சுமார் 700 ஏக்கர் நிலப்பரப்பு பரம்பரை பரம்பரையாக தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான நிலமென்பதால் இரவோடு இரவாக அந்த பௌத்த விகாரைக்கே சொந்தமாக்கபட்டு அம்பாறை என்ற பெயர் தீகவாப்பிய என பெயர் மாற்றம் பெற்றது.


இதையடுத்து அரசின் குறி வடகிழக்கு இணைந்த தாயக தலைமை பகுதியான திருகோணமலை மீது சிறப்பாக தன் காரியத்தை செயல்படுத்தியது. இதற்கு வசதியாக மகாவலி G வலயம் என்ற ஒரு சிறப்புச்சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு ஜெயபூமித்திட்டம், சுவர்ணபூமித்திட்டம் என்பன உருவாக்கப்பட்டு குடியேற்றத்திட்டங்கள் மூலம் சிங்களவர்களை குடியேற்றி தமிழர்களின் நிலம் படிப்படியாக அபகரிக்கப்பட்டன, சுவர்ணபூமித்திட்டத்தின் கீழ் திருகோணமலையில் முடிக்குரியகாணி, பராமரிப்பற்றகாணி அரசினால் கையகபடுத்தப்பட்டு சிங்களவர்களுக்கு விசேட நடைமுறையின் கீழ் வழங்கப்பட்டது. அந்தக்காணியை சிங்களவரல்லாதோர் வாங்க முடியாதவாறு சிறப்புச்சட்டமூலத்தின் மூலம் விசேடமாக திருகோணமலையில் அறிமுகபடுத்தப்பட்டது. மகாவலி நீர் சிங்களவர் வாழும் பகுதிகளுக்கு தாராளமாக திசை திருப்பப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதி வறண்ட பிரதேசமாக காட்சியளித்தது


வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பூமி என்பது சிங்களவர்களுக்கு நன்றாகவே தெரியும் இதை புத்தபிரான் காலத்து கல்வெட்டான மகாவம்சம் கூறுகின்றது. இதை இல்லாதொழித்து முழு பௌத்த நாடாக அங்கீகரிப்பதே இலங்கை அரசின் நோக்கம். அதற்கேற்றவாறு இந்தியாவும் எமக்கேதிராகவே செயல்படுகின்றது. 1983 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறையிலே கொல்லப்பட்ட தமிழ் இயக்கங்களின் சில தலைமைகளும் அதேநேரம் யாழ்வடமராட்சி மீதான இலங்கை அரசின் யுத்த நடவடிக்கையிலும் அகதிகளான மக்கள்மீது உதவி செய்யும் நோக்கோடு இந்திய அரசு ஆகாய விமானத்திலிருந்து உணவுப்பொதியைப் போட்டு இலங்கைக்குள் காலடி எடுத்துவைக்க ஆரம்பக்கட்ட செயற்பாட்டில் இறங்கியது. இலங்கைத்தமிழர்கள் மீது வைத்த அனுதாபத்தில் இச்செயலை இந்திய செய்யவில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவின் பிராந்திய நாடுகளான சீனா, பாக்கிஸ்தான் போன்ற எதிர் நாடுகளின் செயல்பாட்டிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள இலங்கையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நினைத்த இந்தியாவின் மாய வலைக்குள் சிக்கியிருந்த தமிழ் இயக்கங்களில் பல குழுக்களின் ஆயுதப்பயிற்சி முகாம் இந்தியாவிலேயே இருந்தது. இதுவும் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது.


இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி, J.R.ஜெயவர்த்தன ஆகியோருக்கிடையே 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. தமிழர் பிரச்னையை இலகுவாக தீர்க்கவேண்டிய இலங்கை அரசுக்கு இலகுவாக தமிழர்களை அழிப்பதற்கான சிங்களவர்களின் ரகசிய திட்டத்திற்கு இந்தியராணுவத்தின் வருகை கைகொடுத்து உதவியது. இந்தியாவால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட அனைத்து ஆயுதக்குழுக்களும் இந்திய புலனாய்வுத்துறையின் திட்டமிட்ட கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். விடுதலைபுலிகள் அமைப்பு மட்டும் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாது தனித்தே இயங்கினர். J.R.ஜெயவர்த்தனவின் பின்பு பதவியேற்ற ர.பிரேமதாசா தெற்கிலே இலங்கையில் பிரசன்னமான இந்திய படையை எதிர்த்து சிங்கள ஆயுத குழுவான J.V.P ராணுவத்திற்கு எதிராகவும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பல கிளர்ச்சிகளை செய்தனர். வடக்கையும் தெற்கையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பு பிரேமதாசாவிற்கு ஏற்பட்டது. இதை உணர்ந்த பிரேமதாசா , இந்தியாவின் வலைக்குள் சிக்காத விடுதலைப்புலிகளை ,மிகத் த்தந்திரமாக , ஜேவிபி யின் கிளர்ச்சியை கட்டுப்படுத்தி , தெற்கை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்க்ககவும், பேச்சுவார்த்தை என்ற மாயைக்குள் விடுதலைப்புலிகளுடன் திட்டம் தீட்டப்பட்ட மிகத்தந்திராமன் முறையில் உள்வாங்கி இந்திய எதிர்ப்பு அலையை உருவாக்கி ஆயுதங்களை வழங்கி களமிறக்கினார்.




வடகிழக்கிலே இந்திய அரசின் அனுசரணையுடன் வடகிழக்கு இணைந்த மாகாணசபை அரசின் அனுசரணையுடன் ஆட்சி புரிந்த, வரதரஜப்பெருமாள், தனித்தமிழ் ஈழ அரசை பிரகடனப்படுத்தி நாட்டை விட்டு இந்தியப்படையுடன் வெளியேறினார் . விடுதலைப்புலிகளுக்கு எதிரான அனைத்து ஆயுதக்குளுக்களுடனும் இந்தியப்படயுடனும் , விடுதலைப்புலிகள் போரிட்டனர். தமிழரை வைத்து தமிழரை அளிக்கும் கைங்கரியம் , இலங்கை அரசினதும் , இந்திய அரசினதும் ஆசிர்வாதத்துடன் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டு , இந்தியப்படை வெளியேற்றப்பட்டது .இதன் பிறகு , விடுதளைப்புளிகளுடாணன் பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டு , பிரேமதாசா அரசினால் ஒரு முறுகல் நிலை உருவானது. அப்பொழுது கூட பலமுறை தற்போதைய வெளிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் அவர்களால் வரையப்பட்ட தீர்வுத்திட்டமொன்று பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு கொண்டுவரப்பட்டு எதிர்க்கட்சியினரால் கிழித்தெறியப்பட்டது. அதை எதிர்த்து தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பிலிருந்து மாத்தறை வரை பத யாத்திரை சென்றார். இதற்க்கு முன்பு ஒரு தடவை இது போன்ற ஒரு தீர்வுத்திட்டமொன்று பாராளுமன்றத்திற்கு வந்த பொழுத.JR. ஜெயவர்த்தன் அவர்கள் கொழும்பிலிருந்து கண்டிவரை பாதயாத்திரை சென்றது நினைவிருக்கலாம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர்களின் பிரச்சனை தொடர்பாக வட்ட மேசை மகாநாடு , சதுரமேசை மகாநாடு, சர்வகட்சி மகாநாடு போன்றவற்றை ஆரம்பித்து அவர்களது ஆட்சி களம் முடியும் வரை இழுத்தடிப்பு செய்வது பலமுறை இடம்பெற்றுள்ளது .


இதுவரை நடந்த பத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் இடம்பெற்ற சம்பவங்கள், தொகுதி தேர்தல் முறை , மாவட்ட முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு , வடகிழக்கே வாழ்கின்ற தமிழர்களின் பூர்வீகம் என்ற பதம் மாற்றப்பட்டு , தமிழர்களின் பாரம்பரிய கலை கலாச்சாரம் அழிக்கப்பட்டு, புத்திஜீவிகள் இல்லாது ஒழிக்கப்பட்டு , திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தால் , தமிழர்களின் தன்னாதிக்க பரம்பல் சிதைக்கப்பட்டு பெரும்பாலானோர் நாட்டைவிட்டு வெளியேறி , இலங்கைத்தமிழர் என்ற பதம் புலம் பெயர்ந்து வாழ்கின்ற 12 லட்சம் தமிழர்களால் , உலகத்தமிழர்கள் என்ற பரிணாமம் பெற்று ,உலகநாடுகளிலே தடை செய்யப்பட்டு அதற்க்கு பயங்கரவாதிகள் என்ற பட்டம் சூட்ட்டப்பட்டு விடுதலைப்புலிகள் அமைப்பு பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது . இதை திறம்பட செயல்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ 21 நாடுகளின் உதவியய்ப்பெற்று இந்தியாவின் ஆசிர்வாதத்துடன் , 2009 ம் வருடம் , மே மதம் 18 ம் திகதி , பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்து , ஆயிரக்கணக்கான விதைவைகளையும் , அங்கவீனர்களையும் உருவாக்கி , இளம் சமுதாயத்தை அழித்தொழித்து , சித்திரவதை செய்து கொன்று குவித்து , 22 , 000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு சொந்தக்கரர்களான பூர்விக தமிழர்களை அழித்து, 2 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் மின்சாரம் பாய்ச்சிய முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்து , ஒரு வேளை உணவுக்கு பத்திரமேந்தி பிச்சை எடுக்கின்ற நிலையில் வைத்து , உலக நாடுகளின் மனிதாபிமான பணியாளர்களை வெளியேற்றி ,உலக மையமான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணியாளர்களை கூட உள்ளே நுழைய விடாமல் தடுத்து 30 வருட கல அவசர கால சட்டத்தின் கீழ் ஆட்சி செய்து , வெளியேற்றப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நிலங்களிலே , பாரிய ராணுவ முகாம்களை உருவாக்கி , அதன் அண்டிய பகுதிகளில் வசித்த தமிழர்களை மீண்டும் குடியேரவிடாமல் தடுத்து , எஞ்சிய பகுதிகளில் சிங்கள கடும் போக்களர்கலர்களான ,பௌத்த துறவி மேதானந்த தேரர் , சம்பிக்க ரணவக்க , இவர்களின் ஆலோசனைப்படி பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு அதை அண்டிய பகுதிகள் புனித பூமியாக பிரகடனப்புத்தப்பட உள்ளது. இதை புலம்பெயர்ந்து வாழ்கின்ற உலகத்தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து பயங்கரவாதம் என்ற பெயரில் இருந்து விடுபட்டு ஜனநாயக ரீதியிலான , அகில உலகத்தினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடுகடந்த தமிழீழ அரசிற்கு கை கொடுத்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் .


இடம் பெற்ற சம்பவங்களின் பொது உயிரை தற்காத்து கொள்ள அண்டை நாடான தமிழ் நாட்டில், மூன்றரை லட்சம் இலங்கை தமிழ் மக்கள் அகதி முகாம்களில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகின்றது . கடந்த சில மாதங்களிற்கு முன்பு மேலும் இரண்டு வருடங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவல் தடை நீடிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்திற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் , இலங்கை அரசினால் அளிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள பின்பும் , இந்திய உள்துறை அமைச்சால் விடுதலைப்புலிகள் அகதி முகாம்களுக்குள் ஊடுர்வி இருப்பதால் தடை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .


பரந்த உலகில் சிதைந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவருமே பயங்கரவதிகளாக சித்தரிக்கப்பட்டு அவர்களது ஜனநாயக ரீதியிலான உரிமையில் தெரிவு செய்யப்பட நாடு கடந்த தமிழீழ அரசிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக , இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்புச்செயலாளர் உலகத்தின் பாதுகாப்பு செயலாளராக எப்பொழுது பதவிப்பிரமாணம் செய்தார். உலக தமிழர்களின் பொருளாதரத்தை அழித்து அவர்களையும் சிறைக்குள் வைப்பதாக கூக்குரலிடுகிறார். தமிழர்கள் அனைவரையும் பயங்கரவதியாக இலங்கை அரசு கருதும் போது புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களிடையே திரை மறைவில் இருந்து கொண்டு இணையத்தளங்கள் ஊடாக இலங்கை அரசிற்கு சார்பாக கட்டுரைகளை எழுதி இங்குள்ள மக்களை மேலும் சங்கட நிலைக்குள் உருவாக்குவதை தவிர்த்து சிறந்த ஒரு எதிர்கால நிலையை உருவாக்க ஏற்றவாறு கருத்துக்களை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன் .. நீங்கள் எந்த அளவிற்கு அரசிற்கு ஆதரவு தெரிவித்தாலும் உங்களை அரசிற்கு ஆதரவான தமிழன் என்று செங்கம்பள வரவேற்பு கொடுக்க மாட்டார்கள் . அதாவது நாடு சுதந்திரமடைய சமபங்கு வகித்த தமிழர்களுக்கு பயங்கரவாத ஆயுதக்குழு என்ற பட்டம் கொடுக்கப்பட்டு , இந்தியப்படை வெளியேறுவதற்கும் சமபங்கு கொடுத்து உள்வாங்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழினமே ஆயுதம் தங்கிய புலிகளாக உலகெங்கும் பரப்பப்பட்டு, இலங்கையிலே எந்த அமைப்பு ஆட்சிக்கு வருவது என்றாலும் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை முன்னிறுத்திதான் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் .


அதே போன்று இந்தியாவிலும் இம்முறையே பின்பற்றப்படுகின்றது . தமிழ் நாட்டில் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற , வை . கோபலசுவாமி, சீமான் , பழநெடுமாறன் , திருமாவளவன் , டாக்டர் ராமதாஸ் மற்றும் பல தமிழ் உணர்வாளர்களும் , தடா , பொட போன்ற சட்டங்களுக்கு முகம் கொடுத்து இன்னும் எம் உறவுகளுக்கு உயிர் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் . நாம் பிளவுபட்டு எம்மை வைத்து ஏனையோர் சாதிப்பதை விட, அனைவரும் ஒன்று சேர்ந்து நாடு கடந்த ஜனநாயக தமிழீழ அரசிற்கு கை கொடுத்து , இளம் தலைமுறையினருக்கும் , முகாமில் இருப்போருக்கும் , சிறையில் இருப்போருக்கும் , அனைத்து தமிழருக்கும் ,சுதந்திர வாழ்வை ஏற்ப்படுத்த ஒன்று சேர்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக