சனி, 15 ஜனவரி, 2011

இலங்கை செல்லத் தயாராகும் ஐ.நா நிபுணர் குழு!

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழு இலங்கை வர தயாராகி வருவதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இலங்கை வருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதற்கான திட்டங்களை நிபுணர் குழு செயற்படுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள பான் கீ மூன் கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை சந்தித்து பான் கீ மூனின் நிபுணர் குழு கலந்துரையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்திற்குள் பான் கீ மூனிடம் கையளிப்படவிருந்த நிலையில் அக்குழுவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்  என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்சு சாட்சியமளிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக