வெள்ளி, 19 மார்ச், 2010

அவதானிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கை

அவதானிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் பட்டியல் படுத்தியுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள், கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் மனித உரிமைகள் ஆண்டறிக்கையில் அவதானிக்கப்பட வேண்டிய நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயர் மட்டுமே இந்த ஆண்டில் இணைக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. சிறிய அளவில் விடுதலைப் புலி உறுப்பினர்களும், ஏனைய ஆயுதக் குழுக்களும் தொடர்ந்தும் இயங்கி வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் கருணா தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் ஆயுதமேந்தி வருவதாக வெளிவவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் வேறும் தமிழ் துணை இராணுவக் குழுக்கள் இடம்பெயர் முகாம்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்கள் ஆயுதங்களை களையவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக