வெள்ளி, 19 மார்ச், 2010

அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை

இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும். 1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள் 2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள் 3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் 4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள். 5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள் 6. ஈழத்தமிழர் வரலாறே முழுமையாகத் தெரிந்தவர்கள் 7. கருணாவைச் சிறைபிடித்து பின் விடுதலை செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர்கள் இப்படி இவர்களின் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் திடீர் திருப்பமாக மேற்;கூறப்பட்ட அறிவிப்பு எதற்கும் சம்பந்தம் இல்லாதவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகவும் ஈழமாகவும் ஆணித்தரமாகவும் சிந்தித்து செயலாற்றவேண்டும். புலிகளுக்கான தடை அகற்றப்படவில்லை. எப்படிப் புலிகள் சரணடையமுடியும்? அப்படிச்சரணடைந்தால் அது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்படி தான் சிறையில் அடைக்கப்படும். இந்த அறிவிப்பானது எஞ்சியுள்ள புலிகளைக் கூண்டில் அடைக்க ஒரு தந்திரமான சதியாகவும் இருக்கலாம் அல்லவா? சர்வதேசம் புலிகள் என்ற விடயத்தில் ஓர் அணியாகத்தான் இன்றும் இருக்கின்றனர் என்பதைத் தமிழ்மக்கள் யாவரும் மறந்துவிடக்கூடாது. ஒரு பக்கம் எதிர்பபும் மறுபக்கம் அணைப்பும், இன்னொரு பக்கம் ஆதரவுமாக சர்வதேசம் தமிழ்மக்களைப் பலவழிகளில் பொறி வைக்கின்றது. உதாரணமாக தமிழர்களின் உரிமைப்போராட்டம் என வர்ணித்த ஜேர்மனி புலி உறுப்பினர்களைக் கைது செய்தது யாவரும் அறிந்த விடயம். எனவே இந்த அறிவிப்பில் ஏதோ ஒரு பாசாங்குத்தன்மை ஒளிந்திருக்கின்றது. இவற்றைத்தமிழ்மக்கள் சரியா எடைபோடவேண்டும். சில புலி உறுப்பினர்கள் தஞ்சம் அடைந்தால் அவர்கள் மூலமாக புலிகளின் தற்கால செயற்பாடுகளையும், யுக்திகளையும் உள்ளடிவாறுகளையும் அறியலாம் என்ற உள்நோக்கங்களும் இருக்கலாம். இந்த அறிவிப்பானது ஒரு பொறியாக இருக்கலாம். புலிகள் உறுப்பினர்கள் ஏன் இங்கு வந்து அகதி கோரவேண்டும்?

1 கருத்து: