புதன், 17 மார்ச், 2010

மாவீரர் அஞ்சலி.....

உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….. சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்….. மலைகளைப் பிழந்து தமிழன் வீரம் சொன்னவர்கள்…. உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்… உலகச் சதிகளினால் மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்…. இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்…. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தையாயிரத்துக்கு மேல் தங்கள் மூச்சுக்களைத் திறந்து எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்…. வியூகம் உடைக்க வாவென்று அழைக்கு முன்னே.. வரிசையில் முதல் சென்ற வரலாற்று நாயகர்கள்…. சுய நலம் நீங்கி பொது நலம் தாங்கி… விடுதலையே மேலோங்கி ; அதற்காய் மரணித்த வீரர்கள்….. தாய்ப்பாசத்தை விலக்கி வைத்து… விடுதலையை சிரசில் வைத்து… அந்த ஒன்றையே சிந்தித்து…. எங்கள் மனங்களெல்லாம் உரம் தூவிச் சென்றவர்கள்…. அவர் ஆசைப்பட்ட ஓர் உடை போராளிக்கான சீருடை…. விரும்பிய ஆபரணம் கழுத்தில் தொங்கிய ஓர் மரணம்…. எங்கள் நிம்மதித் தூக்கத்திற்காய் தங்கள் நித்திரை கலைத்தவர்கள்…. நிலம் காடு மேடெல்லாம் படுக்கையாய் கொண்டவர்கள்…. மானிட உருவில் வந்த தமிழின் மானம் நீங்கள்….. விடுதலைக் கனவை மட்டுமல்ல வேதனையின் சிலுவை பல சுமந்தீர்கள்… மரித்தாலும் உயிர்த்து எழ நீங்கள் பரமபிரான் ஜேசுவல்ல…. மரணத்தை நிரந்தரமாக்கிக் கொண்ட எங்கள் தமிழீழத்தின் சிசுக்கள்… கார்த்திகை இருபத்தியேழு உம் கல்லறையை வணங்கிடும் நாள்…. கார்த்திகை பூவினால் உங்கள் கல்லறை நிரப்பிடும் நாள்… மாவீரர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிடும் நாள்.. எம் மனமும் உன் ஆன்மாவும் கண்ணீர் பூக்களால் பேசிடும் நாள்… உம் லட்சியம் வெல்வோம் இதை இன்று சத்தியமாய் கொள்வோம்.. உன் சாவின் கனவுகளை நிறைவேற்ற சபதங்க் கொள்வோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக