திங்கள், 26 ஏப்ரல், 2010

பெற்றோர் மத்தியில் அச்சநிலை!


யாழ்ப்பாணத்தில் சிறுவர்களைக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. யாழ். குடா நாட்டில் நேற்று முன்தினம் மட்டும் சிறுவர்களைக்கடத்தும் சம்பவங்கள் மூன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 11.40 மணி யளவில் ஓட்டுமடம் பகுதியில சிறுவன் ஒரு வனை கடத்த முயன்ற சம்பவம் சிறுவனின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டதாக அராலி யைச் சேர்ந்த பிரஸ்தாபச் சிறுவன் கணனிக் கற்கை வகுப்பை முடித்துக்கொண்டு ஓட்டு மடம் சந்தியில் பஸ்ஸுக்காக காத்திருந்த வேளை சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அச் சிறுவனை கடத்த முயன்றதாகவும் அதன் போது அச்சிறுவன் கூக்குரல் இடவே அந்நபர் தப்பிச்சென்றதாகவும் பொலிஸ் முறைப்பாட் டில் கூறப்பட்டது. கடத்த முயன்ற நபரிடம் கத்தி காணப்பட்ட தாக அச்சிறுவன் தெரிவித்தான். இதேவேளை அராலி வடக்கில் நேற்று முன்தினம் மாலை இரு சிறுமிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கடத்த முயற்சித்துள்ளனர். எனினும் சிறுமிகள் இருவரும் கூக்குரல் இட்டு கத்தியதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பித்துள்ளனர். அராலி வடக்கு செட்டியார் மடம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமிகளே மோட்டார் சைக்கி ளில் சென்ற இனந்தெரியாத இருவரால் கடத் தல் முயற்சி இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிரஸ்தாப இரு சிறுமிகளும் தனியார் கல்வி நிலையம் ஒன்றிக்கு சென்று விட்டு ஒழுங்கை ஒன்றின் ஊடாக வீடு திரும்பிச் செல்கையில் கறுப்பு நிற கண்ணாடியுடைய தலைக்கவசமணிந்த இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில்பின் தொடர்ந்துள்ளனர். சன நடமாட்டமற்ற பகுதியில் வைத்து எங்கே செல்கிறீர்கள் என சிறுமிகள் இரு வரையும் இனந்தெரியாதோர் கேட்டுள்ளனர். அதை ஏன் உங்களுக்கு என தான் பதிலளித் தாக சிறுமி ஒருவர் கூறுகிறார். பதிலுக்கு வாருங்கள் வீட்டே கொண்டு சென்று விடுகிறேன் என கடத்தல் காரர் கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த தாம் நாங்கள் வீட்டுக் குச் செல்வோம் நீங்கள் உங்களுடைய வேலை யைப்பாருங்கள் என்று தான் கூறியதாகச் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து கடத்தல்காரர்கள் இருவரும் கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டபோது தாம் கூக்குரல் இட்டு கத்திய தால் அவர்கள் தப்பிச்சென்றனர் என்றும் சிறு மிகள் தெரிவித்தனர். இதேவேளை மூளாய்ப் பகுதியில் மயக்க மருந்து அடித்து சிறுவனை கடத்த முயன்ற சம் பவம் ஒன்றும் சங்கானையில் நேற்று மாலை சிறுமி ஒருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவித் தன. எனினும் அதனை உறுதிப்படுத்த முடிய வில்லை. இதேவேளை சிறுவர்களை கடத்த முய லும் சம்பவங்கள் இடம் பெறுவதால் பெற் றோரை விழிப்புடன் இருக்குமாறு புத்திஜீவி கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக