திங்கள், 26 ஏப்ரல், 2010

அவசரகால சட்டம் நீக்கப்படும் என கூறி வெளி நாட்டு சலுகைகளை பெற பீரிஸ் திட்டம்

அவசரகால சட்டத்தினை நீக்கப்போவதாக கூறி வெளி நாட்டு சலுகைகளை பெற வெளி நாட்டு அமைச்சர் பீரிஸ் திட்டம் வகுத்துள்ளார். இதன் படி இலங்கையில் பரந்துபட்ட மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுவரும் அவசரகால சட்டத்தைத் தளர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தினை நீக்குவது பற்றி தாம் யோசித்து வருவதாகவும் ஆனால் இதற்கான கால எல்லை எதனையும் தாம் தீர்மானிக்கவில்லை. எனவும் கூறியுள்ள பீரிஸ் ;சூழ்நிலைகள் மாற்றமடைந்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, யுத்த காலத்தில் நடைமுறைப்படுத்திய பாதுகாப்பு நடைமுறைகள் சிலவற்றை அரசு படிப்படியாகத் தளர்த்தும். என கூறியுள்ளார். பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்காகவே இதனைச் செய்கிறோம். இது சரியான விடயம் என்பதால் இதனை முன்னெடுக்கவுள்ளோம்.வெளியுலக அழுத்தங்கள் காரணமாக இதனை நாம் முன்னெடுக்கவில்லை. இதேவேளை, இவ்வாரம் பூட்டானில் இடம்பெறவுள்ள "சார்க்' உச்சிமாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுகளை மேற்கொள்வார். இந்தச் சந்திப்பின் போது யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் நிலைமையை முன்னேற்றுவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்துவார். எனவும் கூறினால் பீரிஸ். ஆனால் உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி சலுகையினை பெறுவதற்கும் கூடவே போர்குற்ற விசாரணைகளை தணிப்பதற்குமே இந்த முன்னகர்வு என கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக