ஞாயிறு, 20 ஜூன், 2010

ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிக்கா சென்றடந்தார்

ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகம் அமெரிவிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

வொஷிங்டன் டுலஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டதாக ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு குறிப்பிட்டது.


இந்நிலையில், தமது விடுதலைக்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஜெ.எஸ்.திஸாநாயகம் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும், 2007ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்த சஞ்சிகையொன்றின் ஊடாக இன வேறுபாட்டை தூண்டும் செய்திக் கட்டுரையை வெளியிட்டாரென்றும், இந்த சஞ்சிகைக்கு நிதி சேகரித்து அதன் மூலம் பயங்கரவாத செயல்பாட்டிற்கு உதவினாரென்றும் ஜெ.எஸ்.திஸாநாயகம் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.


இந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், அவசரகால சட்ட விதிகளின் கீழும் ஜெ.எஸ்.திஸாநாயகம் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஜெ.எஸ்.திஸாநாயகத்திற்கு உலக ஊடக சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக