ஞாயிறு, 20 ஜூன், 2010

கருணாநிதியின் செம்மொழி மாநாடு ஒரு கேலிக் கூத்து!

தமிழும், தமிழினமும் வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவது கேலிக்கூத்தானது- கடும் கண்டனத்திற்கு உரியது என, அ.தி.மு.க பொதுச் செயலாலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய சூழலில்
செம்மொழி மாநாடு நடத்தப்படுகின்றமையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கை வருமாறு:


“கருணாநிதி ஆட்சியில், தமிழகத்தில் தமிழன் நிம்மதியாக வாழ வழியில்லை. தி.மு.க வினரின் வன்முறைச் செயல்களால், தமிழர்கள் தினம் தினம் செத்து மடிகின்றனர்.
தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.லோக் சபாவில் அமைச்சர் தமிழில் பேசும் உரிமை, சென்னை மேல்நீதிமன்றில் தமிழில் வாதாடும் உரிமை ஆகியவற்றைக்கூட, தி.மு.க அரசால் பெற்றுத் தர முடியவில்லை.


செம்மொழிக்கு அந்தஸ்து வாங்கித் தந்துவிட்டாரெனத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் கருணாநிதி.இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், இலட்சக்கணக்கான தமிழர்கள், எந்த வசதியுமின்றி, முகாம்களில் அடைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


இலங்கைஜனாதிபதி 2009ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள், முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று முன்பு உறுதியளித்திருந்தார்.
சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அவர், “இந்த ஆண்டு இறுதிக்குள் 47 ஆயிரம் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள்’ என, உறுதியளித்துள்ளார்.
இந்த உறுதியெல்லாம் வாயளவில் தான் இருக்கிறதே தவிர, செயற்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இவையெல்லாவற்றையும் நன்கு தெரிந்து வைத்திருந்தும்கூட கடிதம் எழுதி, கண்துடைப்பு நாடகம் நடத்துகிறார் கருணாநிதி.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் இல்லை. தமிழும், தமிழினிமும் வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது கேலிக்கூத்து. கடும் கண்டனத்துக்குரியது.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக