வெள்ளி, 11 ஜூன், 2010

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் குறித்த விவாதம்!

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.



பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் தலைமையிலான கூட்டு அரசு பதவியேற்ற பின்னர் நடைபெறும் முக்கியமான விவாதமாக இது கருதப்படுகின்றது.


இதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Siobhain McDonagh மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சியில் இருந்த போது சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திருந்தது.


இந் நிலையில், பிரித்தானியாவின் புதிய அரசு சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை இவ் விவாதத்தில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக