ஞாயிறு, 6 ஜூன், 2010

தமிழீழம் என்ற பெயர்... -கண்மணி

மகரந்தங்கள் என நம்பி
பாதங்களை அழுத்தியபோது
நெருஞ்சி முற்கள் தைத்தன.
கொட்டிய குருதியில்
வஞ்சகம் புரிந்தது.
புன்னகைக்குள்ளே
புதைக்குழி.



கைக்குலுக்கலில்
மறைந்திருக்கும்
கல்லறை.
அமைதிப்படையின்
அடையாளம்.


நம்பிக்கை துரோகமாய்
நீதி அநீதியாய்
ஒரு இனத்தின்மீது
முள்முடியாய் சூட்டப்பட்டது.
தமிழரின் பிணவாடை
புத்தனுக்கு ஊதுபத்தியாய்.


மகிந்தா
விலை கொடுத்து
வாங்கிய வெற்றி
விலகிப் போக
தொடங்கியது.
விழாவிற்கு போகாமல்
அச்ச காய்ச்சல் வந்து
தடுக்கியது.


புலிகளை புதைத்தார்களாம்
புல் தடுக்கி வீரர்கள்.
அவர்கள் எலிகளாய் பொந்துக்குள்
ஒளியும் காலம் வருகிறது.
புலி தலைவனின்
விழி அசைப்பு
ஒளியேற்றும்.
இருள் என்ற
சொல் அங்கே
தடையாகும்.


தடை கடந்து
மடை என
தமிழர் படை.
விடை கொடுக்கும்
மகிந்தாவின்
திமிர் படைக்கு.


எதை இழந்தோம்
புலம்புவதற்கு
நாம் இங்கே.
பெறுவதற்கு
நாடுண்டு
பார் அங்கே.


இருள் விலக்க
பரிதி போல்
நம் தலைவன்.
ஒளி தருவான்
நம் வாழ்வில்
தமிழ் முதல்வன்.


வியப்படைந்து
ஒதுங்கி நிற்கும்
இந்தியம்.
திகிலடைந்து
ஒளிந்து கொள்ளும்
சிங்களம்.


தமிழீழம் என்ற பெயர்
ஐ.நா.வில் ஒலிக்கும்.
தமிழனின் புலிக்கொடி
வீரமாய் பறக்கும்.


தமிழ் மறவர்
விளைந்த மண்
தரணிக்கே தெரியும்.
தமிழ் பகைவர்
வீழ்ந்த மண்
என்பது நமக்கு
மட்டும் புரியும்.


திகையாதே
நம் தலைவர்
உடன் வருவார்.
திசையெட்டும்
நம் இனத்தை
பதிவு செய்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக