ஞாயிறு, 6 ஜூன், 2010

அன்றாட பிரச்சினைகள், போராளிகளை விடுவித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முதல் முறையாக நாளை மாலை நடைபெறவுள்ள உத்தியோகபூர்வமான சந்திப்பில் பேச்சுவார்த்தையில் போருக்குப் பிந்திய மீள்குடியேற்றத்துக்கும், சிறையில் உள்ள இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு, தமிழ் மக்களுக்கு உரிய நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.


தமிழ் மக்களின் போருக்கு பிந்திய கால மீள்குடியேற்றம் , சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இளைஞர், யுவதிகளை விடுவிக்க விரைவான நடவடிக்கை விடுதலைப் புலிப் போராளிகள் எனத் தெரிவித்து முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளித்தல் ஆகியன குறித்தும் நாளைய பேச்சுவார்தையின் போது வலியுறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.


நாளைய சந்திப்பில் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேலும் விவரித்ததாவது:


1. வன்னியில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் மேற்கொண்ட விஜயத்தின் போது நேரில் கண்ட மக்களின் அவலங்களை எடுத்துக்கூறி அவர்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வுக்கான செயற்பாட்டை விரைவுபடுத்த வற்புறுத்தல்.


2. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவிக்க விரைவான நடவடிக்கை எடுக்கக் கோருதல்.


3. வலி.வடக்கு உட்பட ஏனைய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுதல்.


4. மற்றும் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் உடனடியாகத் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்து விரைந்து களைவதற்கு அரசாங்கத்திடம் வற்புறுத் தல்.


இன்று கொழும்பில் மாலை கூடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் பேசவேண்டிய விடயங் கள் முன்னுரிமை அடிப்படையில் இனங்காணப்படும் என்றும் மாவை சேனாதிராசா கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக