வெள்ளி, 16 ஜூலை, 2010

மேஜர்-அல்பேட்(கந்தையா ரூபநிதி)-அச்சுவேலி

பண்டிதர் வீரச்சாவின் பின் அவரது பொறுப்பை ஆல்பர்ட் மிக நேர்த்தியாக முன் நடத்தினார் .இவர் கண்ட களம் பல .ஈழ விடுதலைப் பயணத்தின் ஆரம்ப கால அத்திவார
உரமாக ஆல்பர்ட்திகழ்ந்தார்.விடுதலைப் போராட்டம்வீச்சாக ஆரம்பித்த அந்த நாட்களில் ஆல்பர்ட் குரூப்
என்றால் புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, யாழ், நாவுக்குளி, பலாலி ,அளவெட்டி,பகுதிமக்களுக்கு ஒரு நம்பிக்கை. கிட்டு அண்ணா 
தலைமையில் யாழ் மாவட்ட இராணுவத்தைமுகாமுக்குள் முடக்கியதன் 
பெரும் பங்கு ஆல்பர்ட்,ஆல்பர்ட் குரூப்பையும் சாரும் .ஆல்பர்ட்
தலைமையில் தான் முதல் முதலாக செல் தொழிற்சாலை நீர்வேலி குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டது 
இவர் ஒரு அன்பான பண்பான மக்கள் விரும்பி கதைக்கவிரும்பும் அற்புத மனிதர் .இவருக்கு கரம் விளையாட்டு என்றால் அலாதிபிரியம்.
ஓய்வு நேரங்களில் எல்லோருடன்பயிற்ச்சி எடுப்பதை விரும்புவார் .
இவரது முகாமில் இப்போ உள்ளது போல் நவீனஆயுதங்கள்
இருக்கவில்லை.அந்த ஆயுதங்களை வைத்து நெருப்பில் குளித்த வீர வேங்கை எங்கள் மேஜர்ஆல்பர்ட் அண்ணா......
 .21.12.1985அன்று சுதுமலையில் எமது இன்னொரு அணியின் முகாமை இராணுவம்சுற்றி வளைத்தபோது அந்த முறியடிப்பின் போது ஆல்பர்ட் 
அண்ணா வீரச்சாவடைந்தார் .
அவரது இறுதி நிகழ்வின் போது மக்கள் திரண்டு அஞ்சலிசெலுத்தியபோது
 ஹெலி நோட்டமிடகிட்டு அண்ணா ஜி பி ம் ஜி கொண்டு வந்தபோது 
(முதன் முதலில் அன்று தான் இந்த ஆயுதம்
அறிமுகம்)மக்கள் கண்ணீர்வெள்ளத்தில் ஆல்பர்ட் அண்ணாவை 
கொன்ற தும்பி வருகிறதுஅடியுங்கோ அடியுங்கோ என்று கண்ணீருடன் 
கத்தியது இன்னும் என் மனவானில்.....
உறுதியின் உறைவிடமாக விடுதலைப் போராடத்தின் ஆரம்பகாலகட்ட அத்திவார உரம்மேஜர் ஆல்பர்ட் இன் வழிநடத்தலில் வந்த 
அனைவரும் (ஒரு சிலரைத்தவிர )அவரைப்போல் அமைப்பின் இமாலய
வளர்ச்சிக்கு உறுதியாக இருந்து வீரகாவியமாகினர்.(விடுதலைப் போராட்ட வரலாற்றில் மேஜர் பதவி ஆல்பர்டுக்கே முதன் முதலாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ) 

2 கருத்துகள்:

  1. மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது

    பதிலளிநீக்கு
  2. தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைக்கு தமிழீழம் தலை வண்ங்கி நிற்கிறது....

    பதிலளிநீக்கு