ஞாயிறு, 11 ஜூலை, 2010

கிளம்பிவிட்டார்கள் மீண்டும் துகிலுரிய ..........

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு, ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குவதற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



ஏனைய இந்திய அரச தரப்புப் பிரமுகர்களும் இதுவிடயத்தில் தமது ஆக்கபூர்வமான நிலைப் பாட்டை இந்தியா சென்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவினரிடம் வெளிப்படுத்தினர்.


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அறுவர் குழு இந்தியாவுக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது தெரிந்ததே.
தமதுவிஜயத்தின் பின்னர் கூட்டமைப்பினர் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் மேற்சொன்ன விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் மாவை சேனாதிராசா, அ.விநாயக மூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல் வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இம்மாதம் நான்காம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை புது டில் லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் திருமதி நிருபமா ராவ் ஆகியோரோடு ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்தினர்.


பிரதமர், அமைச்சர்கள் கூட்டமைப்பினரிடம் வாக்குறுதி


இலங்கையில் உள்ள தமிழ்பேசும் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நிலைத்து நிற்க கூடியதுமான தீர்வொன்றை அடைவதற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பைச் செய்யும் என்ற வாக்குறுதியை பிரதம மந்திரியும் ஏனைய அமைச்சர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக் குழுவிற்கு வழங்கியுள்ளனர்.


வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காகவும் புனர் வாழ்வுக்காகவும் 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு கட்டிக்கொடுக்க முன்வந்த மைக்கு இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் இலங்கைத் தமிழ்மக்கள் சார் பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.


இந்த உதவியோடு வாழ்வாதாரத்திற்காகவும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி சம்பந்தமாக வடக்கிலேயே இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் வடக்கிலே வாழும் தமிழ் மக்களுடைய எதிர்கால நல்வாழ்விற்கு பேருதவியாக அமையும் என்பதனையும் அவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.


தமிழ்மக்கள் இடப்பெயர்வுக்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியதன் அவசர அவசிய தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுக்கு வலியுறுத்தியது.


அத்தோடு வடக்கிலும், கிழக்கிலும் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பி தமது சகஜ வாழ்வை மீள ஏற் படுத்த வகை செய்ய வேண்டும்.


வடக்கு கிழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாத குடிசன விகிதாசார மாற்றங்களைக் கொண்டு வரும் இலங்கை அரசின் நடவ டிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துக்கூறினர்.


இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை உருவாக்குதற்கும் இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் சுய மரியாதையோடும் சுய கௌரவததோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கும் அவர்கள் தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாஷைகளை கண்டடைவதற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை பிரதம மந்திரி வெளிப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக