ஞாயிறு, 11 ஜூலை, 2010

உங்கள் பார்வையில் நானும் துரோகியா?.......

எம் மண்ணில் இந்திய அமைதி படை கோரத்தாண்டவமாடி வெளியேறிய போது எனக்கு 16 வயது பல இடங்களில்
இடப்பெயர்வுகள்,படுகொலைகள்,வன்புணர்வுகள்.அதற்க்குமேலாய் என் கண்முன்னே எனக்கு கல்வி போதித்த ஆசிரியரும்,அவர் மகனும் கொடூரமாக சுட்டுக்கொல்லபட்டபோது பெருமளவில் மன பாதிப்புக்குள்ளானேன்.
அதன் தாக்கம் காரணமாகவே மண்ணில் புலிவீரர்கள் மிளிர்ந்த போது நானும் அவர்களில் ஒருவனானேன்.எனது வயதின் குறைவு காரணமாக இயக்க தலைமை எனை உறுப்பினராக இணைத்து கொள்ளவில்லை.மேலாக நான் தொடர்ந்தும் கல்விகற்ப்பதற்க்கு முழு ஒழுங்குகளையும்,அவர்களே மேற்கொண்டனர்..பல்கலைகழக கல்வி,இதரகல்விகள்,என எனது கல்விகள் தொடர்ந்த போதும் களமுனைக்கு செல்வதற்க்கு கேட்கும் போதெல்லாம் கல்வியை தொடரும் படியே அறிவுறுத்தல் கிடைக்கும்.ஒவ்வொரு விடுமுறையின் போதும் தலைமையால் நியமிக்க பட்ட என் பொறுப்பாளரை சந்திக்கும் போதெல்லாம் என்கல்வி தொடர்பான அண்ணையின் மதிப்பீடு காத்திருக்கும்.அன்றொரு விடுமுறைக்காலம் நானும் வழமை போலவே எனது பொறுப்பாளரை சந்தித்திருந்தேன்.பல விடையங்கள். அலசிய போதும் மீண்டும் 4.30 மணிக்கு வருமாறு பொறுப்பாளர் கூறியிருந்தார்.அதற்கமைய அங்கு சென்றிருந்த நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். ஆம் அன்றுதான் என் உயிரினும்மேலாக நேசித்த அண்ணை சந்தித்த போதும் வாய்மூடி திகைத்து நின்றேன்.என் கல்வி தொடர்பான ஒவ்வொரு அத்தியாயங்களாக கேட்டு விளக்கங்கள் தந்த போது நான் இவ்வுலகில் இல்லாது எங்கோ பறந்து கொண்டிருந்தேன் இனம் புரியாத பூரிப்பு,மகிழ்ச்சி.
யாழ் குடா மீதான சிங்கள பேரினவாதத்தின் தாக்குதல்கள் ஆக்கிரமிப்பாய் நீண்ட போது நான் எனது பொறுப்பாளரிடம் களமுனைக்கு செல்வதற்க்கு தொடர்ந்து கேட்டிருந்த காரணத்தால் அதற்கான அனுமதியும் கிடைத்திருந்தது. எனது கல்வியை இடைநடுவில் தூக்கியெறிந்து விட்டு புதியதொரு களமுனை நோக்கி நடை பயணம் தொடங்கிற்று..களமுனை பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. களசமர்களில் விழுப்புண்கள் எனினும் பயணம் தொடர்ந்தது. புலனாய்வு பணிசார்ந்த களமுனை பணிகள்.
களமுனை பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. களசமர்களில் விழுப்புண்கள் எனினும் பயணம் தொடர்ந்தது. புலனாய்வு பணிசார்ந்த களமுனை பணிகள்.அன்றொரு களமுனை எதிரியின்முகாம் மீதான வலிந்த தாக்குதல். தாக்குதல் தொடங்கி எதிரியின் தாக்குதல் வலுப்பெற்றிருந்தது.எமது அணி வீரர்கள் முள்கம்பிவேலிகளிற்குள் புகுந்து தடையுடைத்து பிற தாக்குதல் அணிகளிற்கு வழி சமைத்து கொண்டிருந்தார்கள்.தடையுடைக்கும் அணிகளிற்கு அருகிலிருந்தவாறு கட்டளைகளை வழங்கிகொண்டிருந்தவேளை எங்கிருந்தோ வந்த ரவையொன்று என் தலையை பதம் பார்த்தது.தாக்குதல் தீவிரம் என் தொடர்புகள் அற்ற நிலையை சமாளிக்க மகளீர் தாக்குதல் அணி தலைவி சுரதா எனது தொலைத்தொடர்பில் கட்டளைகளை வழங்கி தாக்குதலை வெற்றிகரமாக வழிநடாத்தி நிறைவு செய்ததுடன் விழுப்புண் அடைந்து மயங்கிய இருந்த என்னை தனியாக சுமந்து வந்து என் உயிரையும் காப்பாற்றியிருந்தார்..நட்புகள்,அறிமுகங்கள்,காலசூழலில் எம் இருவர் மனங்களிற்க்குள்ளும் காதலாக மலர்ந்திருந்தது.தலைமைகளிடம் எம் இருவரின் தெரியபடுத்தல்களால் எம் வேண்டுகோள் ஏற்றுகொள்ள பட்டு திருமணமும் நடந்தேறியது.ஆனாலும் எம் இருவரின் போராட்ட வாழ்வில் எவ் மாறுதல்களோ ஏற்படவில்லை.குடும்பமாக வாழ்ந்த போதும் எம் மக்களின் துயரான வாழ்வே எம் கண்முன்னே நின்றது.ஒரு குழந்தைக்கு பெற்றோரான போதும் எம் தமிழ் குழந்தைகளின் எதிர்காலமே எம் வாழ்வாகவிருந்தது.


வன்னி மண் மீதான சிங்கள அரசின் கொடும் தாக்குதலின் போதும் களமுனை பணியே எமக்கு காத்திருந்தது. எம் குழந்தையை தெரிந்த ஒருவரே பராமரித்து பாதுகாத்து வந்தார்.நாம் ஒரு போதும் எமக்காக வாழவில்லை,சொத்து சுகங்கள் சேர்க்கவில்லை, எம் மனங்களில் எம் தேசமே சொத்தாக இருந்ததுகளமுனைப்பணிகள் தீவிரமாக கொண்டிருந்த வேளைதான் என் துணைவி களமுனையொன்றில் வீரகாவியமானாள்.மண்ணின் விடுதலையே மூச்சாக கொண்டவளின் உயிர் பிரிந்தது.சிங்கள அரசின் கொடியதாக்குதல்கள். பட்டினிச்சாவுகள்,துயரங்கள் இதற்க்கு மத்தியிலும்,தலைமையால் அழைக்க பட்டேன்.குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வீட்டில் குழந்தையுடன் இருக்குமாறு அறிவுறுத்தபட்டு அதற்கான அனுமதியும் தலைமையால் தரப்பட்டிருந்தது.
போரின் உக்கிரமம் ஒருவாறு குழந்தையுடன் தப்பித்தேன். இப்போ ஒன்றாக களமாடியவர் நினைவுகள் சுமந்தபடி நடைப்பிணமாய் வாழ்கிறேன்.இப்போ சொல்லுங்கள் நானும் துரோகியா?.......போராடாது தப்பித்த போராளிகள், சரணடைந்த போராளிகள்
எல்லோரும் துரோகிகளாக கணிக்கிறது ஒரு கூட்டம். இப்படியாக ஒவ்வொரு போராளிக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் தாயகத்தை நேசித்து துயரங்களை இன்று வரை சுமப்பவர் மீதா இவ்வாறான அவப் பெயர்கள்சற்று சிந்தித்துதான் பாருங்களேன். உண்மைகள் புரியும்.
என்றும் அன்புடன்
அன்பாளன்.

3 கருத்துகள்:

  1. இழப்புக்களையும்,துயரம்,துன்பம் சுமந்த வருக்கே அதன் வலிகள் தெரியும். எமைபோல் சுகபோகமாக வாழ்பவர்களிற்க்கு அவர்களின் வலிகள் எப்போது தான் புரியும்.

    பதிலளிநீக்கு
  2. இப் பெண் மாவீர் வரதாவிற்கு எமது வீரவணக்கம் தியாகதிற்கு மதிப்பளிப்போம். தியாகிகளை போற்றுவோம்..துரோகிகளை அழிப்போம்.

    பதிலளிநீக்கு
  3. இது உண்மையானதா இல்லை சிறுகதையா?

    பதிலளிநீக்கு