ஞாயிறு, 11 ஜூலை, 2010

தீவிரவாதம் என்றால் மக்களைகொல்வதும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் என்றால் ...............

தமிழ் மக்களை தினசரி குண்டு வீசி படுகொலைசெய்த   இலங்கை அரசாங்கம் ஒரு தீவிரவாத அரசு இல்லையா??
சர்வதேசத்தில் தடை செய்யப்பட கொத்து குண்டுகளை அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் வீசி படுகொலைசெய்தது  தீவிரவாதமா?.. இல்லையா??

தன் சொந்த நட்டு மக்கள் மீதே விமான குண்டுகளை வீசி கொலை செய்தும் காயப்படுத்தியும் அவர்களை நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க விடாமல் வாழ விடாமல் நாளாந்தம் இடம்பெயர வைத்து மாணவர்களின் கல்வியை சீரழித்து உணவு மருந்து போன்ற பொருளாதார தடைகளை விதித்து அவலப்படுத்திய சிங்கள அரசாங்கம்நடத்தியது  தீவிரவாதமா?.. இல்லையா??
தன் மக்கள் விடுதலைக்காக அவர்களின் சுதந்திரமான சுபீட்சமான வாழ்க்கைக்காக தன்நலம் பாராது தன் இன்னுயிர் நீந்து போராடி தமிழீழ விடுதலை புலிகள் தீவிரவாதிகளா?....
அப்படியானால் ஏன் அவர்களை தடை செய்து சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமை படுத்தினீர்கள்....?
புலிகள் தீவிரவாதிகள் என்றால்....சிங்கள இனவெறி அரசு தீவிரவாத அரசா? இல்லையா??
தற்கொலை தாக்குதல் நடத்தி சிங்கள இனவெறியர்களை கொன்ரதால்....தடை செய்தீர்களா?
லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்றும் சிறையிலடைத்தும் பாதுகாப்பு வலயம் என்று மக்களை வரவைத்து குண்டு வீசி தாக்கி எண்நிலடங்க
மனித உரிமை மீறல்களை செய்த சிங்கள இனவெறி அரசை தடை செய்து தனிமைப்படுத்தாது விட்டது ஏன்?
ஏன் சிங்களர்களின் உயிர் மட்டும் தான் உயிரா...?
தமிழர்களின் உயிர் என்ன மண்ணா..??
சர்வதேச சமுகமே!...நீதி கனவான்களே...!!
பயங்கரவாத அரசான சிங்கள இனவெறி அரசை தனிமைப்படுத்துங்கள்....!!
மனித உரிமைகளை மதியாது போர்க்குற்றங்கள் புரிந்த இன வெறியர்களை குற்றவாளி கூண்டில் ஏட்ருங்கள்...!!
புலிகளின் மீதான தடையை நீக்குங்கள்!!
தமிழர்களின் உரிமையை அங்கீகரியுங்கள்...!!!
இந்த கேள்விகள் நம் ஒவ்வொருவரையும் விடைதேட உந்த வேண்டும்...!!
நாம் நமது உரிமையை மீட்டெடுக்க போராடுவதோடு சிங்கள இனவெறி அரசை தனிமைப்படுத்து வதற்க்கான குரலையும் சேர்த்து உறுதியாக ஓங்கி ஒலிக்கும் பொழுது தான் நமது போராட்டம் முழுவீச்சில் பலம்பெரும்.


நீதி எல்லோருக்கும் ஒன்றுதான்..... இந்த கருத்துக்கள் நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் ஒவ்வொரு இடத்திலும் முன்வைக்கப்பட வேண்டும்...!
எழுத்துகளும், கருத்துக்களும், கற்பனைகளும் ஒருங்கிணைந்து தான் ஒரு கட்டுரை முழு வடிவம் பெறுகிறது... அதேபோல
நாம் முன்னெடுத்துச் செல்லும் போராட்டம் எமது அவலங்களும் கோரிக்கைகளும் உலகின் நீதி நெறிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டு ஒன்று சேர்ந்த ஒரு மயப்படுத்தப்பட்ட போராட்டமாக அமையும் பொழுது நம்முடைய பிரச்சினை ஜனநாயகத்திற்கு உட்பட்ட எவராலும் கிடப்பில் போடமுடியாது.. புறந்தள்ள முடியாது ......நெறி பிசகாத ஒரு தீர்வை நிச்சயமாக அவர்கள் முன் வைத்தே ஆகா வேண்டும்......
மக்களே சிந்தியுங்கள்!! புலப்போராளிகளே செயல்படுவோம் வாருங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக