ஞாயிறு, 11 ஜூலை, 2010

நெஞ்சமெல்லாம் வாழும் மாவீரன் லெப்டினன்ட் ஜனார்த்தனன் (பாலசிங்கம் மயூரன்)

யாழ் மண்ணிலே அழகிய கிராமமாக விளங்கியதில் அச்சுவேலியும் ஒன்று தென்னை மரங்களின் வரவேற்பும் பச்சை பசேல் என்ற அழகிய வயல் வெளிகளும் கோவில்களும் இக்கிராமதிட்கு மேலும் அழகினை கொடுத்தன ..இந்த அழகிய கிராமத்திலே 02 /02 /1980 மலர்ந்தவன் இந்த மாவீரன் .... தனது ஆரம்ப கல்வியை முடித்தவன் மேல் கல்விக்காக அச்சுவேலி மகாவித்யாலயத்தில் சேர்க்கப்பட்டான். அங்கே மிகவும் திறமையாக கல்வியில் மேம்பட்டான் ..கணிதத்தில் புலியாக இருந்தான் அன்று தெரியவில்லை நியத்திலும் புலியாவான் என்று.
தனது நண்பர்களுடன் என்றும் சந்தோசமாக இருந்தான் தனது கல்வியை இன்னும் உயர்த்த அருகில் உள்ள கமல் அக்கடமி என்ற தனியார் கல்வி நிலையத்தில் கல்வியை தொடர்ந்தான் ...இங்கே கணித ஆசிரியராக இருந்த விநாயகம்பிள்ளை என்பவரின் பாராட்டுகளை பெற்றான் . இவ்வாறு கல்வியில் மட்டு மல்ல விளையாட்டிலும் திறமையாக இருந்தான் ..என் நேரமும் அவன் முகம் சந்தோசத்தை காட்டும்...இவ்வாறு சந்தோசமாக இருந்த போது
1995 சிறீலங்கா இராணுவம் சூரியகதிர் என்ற பாரிய நடவடிக்கை தொடங்கியது. இந்த வேளை எல்லோரும் இடம் பெயர்ந்து வன்னி புறப்பட்டார்கள் இதில் இவனும் குடும்பமும் யாழை விட்டு வெளியேறினார்கள் ..... முல்லைத்தீவில் கற்சிலைமடு என்ற இடத்தில் வந்து சிறு வீடு கட்டி தனது வாழ்க்கைய தொடங்கினான் தனது க.பொ.தா சாதாரணதர கல்வியை ஒட்டுசுட்டான் மகவித்யாலயத்தில் தொடர்ந்தான் இவ்வாறு படித்துகொண்டிருக்கும் போது விடுதலை புலிகளின் ஆளணி திரட்டும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன யாழ்ப்பாணம் எதிரியின் பிடியில் முழுமையாக இருந்தது ...வன்னியில் முல்லைத்தீவு இராணுவமுகாம் பெரும் தடையாக இருந்தது எதோ ஒரு நடவடிக்கைக்கு புதிதாக ஆட்கள் இணைக்க பட்டார்கள். இவ்வேளை ஒட்டு சுட்டான் பரப்புரை பொறுப்பாக இருந்த தங்கையா என்ற போராளியின் கண்ணில் இவன் அகப்பட்டான் ...இன்றைய நிலைமை எடுத்து சொல்லபட்டது ...வீடு வந்த இவன் எல்லோரிடமும் தனக்கு ஏற்பட்ட சம்பவம் தங்கையா என்பவரின் பரப்புரை எல்லாவட்டையும் சொன்னான் இதற்கு வீட்டாரின் எந்த சாதகமான பதிலும் அவனுக்கு கிடைக்கல...தொடர்ந்தும் நாட்டின் நிலைமை எல்லோருக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி எல்லாவட்டையும் நினைத்தவன் ஒருநாள் முடிவெடுத்தான்
20 /05 /1996 அன்று காலை பாடசாலை சென்றவன் மலை ஆகியும் வீடு திரும்பவில்லை உடனே அருகில் அவனுடன் ஒன்றாக படித்த சுகந்தனிடம் கேட்டபோது பாடசாலைக்கு அவன் வர வில்லை என்று சொன்னான் உடனே பாடசாலை அருகில் உள்ள விடுதலை புலிகளின் முகாம் சென்று கேட்டபோது அவனின் மிதிவண்டியை கட்டினார்கள் ....எங்கே என்று கேட்டபோது அவனை பயிற்சிக்காக அனுப்பப்பட்டுளதாக சொன்னார்கள் ...இவ்வாறு மாதங்கள் ஓடின ...06 மாதங்கள் கடந்த பின்னர் ஒரு நாள் வீடு வந்தான் அதே சிரித்த முகத்துடன் எல்லோரும் அவனை கட்டி பிடித்து அழுதார்கள் ....அவன் இம்ரான்பாண்டியன் படையணியில் விக்ரர் விசேட கவச எதிர்ப்பு பிரிவில் இருந்தான் .....முல்லைத்தீவு சண்டை தொடக்கம் 1998 பள்ளமடு சண்டை வரை அவன் ஓயாது பணி செய்தான்..பின்னர் அவனை படையணியின் கள அறிக்கை பொறுப்பை செய்யும் படி சொல்லப்பட்டது ....அதன்படி அவனின் பணி ஆரம்பமானது ....தனது வீடு தொடர்புகளை குறைத்து கொண்ட அவன் தேச பணியில் வேகமா செயல் பட்டான்..எதிரியானவன் ஜெயசிக்குறு என்ற நடவடிக்கை தொடங்கி அது ஒட்டுசுட்டான் வரை எதிரியானவன் நிலை கொண்டிருந்தான் ..அடுத்து முல்லைத்தீவை பிடிக்கும் வேளைகளில் ஈடுபட்டான் ...போராளிகளும் தலைமையின் கட்டளைக்கு ஏற்றபடி பணிகளில் வேகமாக செயல்பட்டார்கள் ....ஒருநாள் தனது சகோதரனை சந்தித்த இவன் தான் எல்லோரையும் சந்திக்க முடியாத நிலைமையில் இருப்பதாகவும் அவசரமா காசு வேணும் என்று கேட்டு தனது இறுதி சந்திப்பை சகோதரனுக்கு தெரியாதபடி முடித்து கொள்கிறான் ..சகோதரன் தந்து உடன்பிறப்பின் இறுதி சந்திப்பு இதுதான் என்று அவனும் நினைக்கவில்லை ....
02 /11 /1999 அன்று அதிகாலை பாரிய ஓயாத அலைகள் -03 என்ற சமர் ஒட்டுசுட்டானில் தொடங்கியது கேணல் சொர்ணம் ,கேணல் ஜெயம் ,பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் சாள்ஸ் அந்தோனி தாக்குதல் படையணியும் ,,மாலதி படையணியும் மட்டும் பல படையணிகள் களமிறங்கி கடும் சமர் தொடங்கியது ...தடை உடைக்கும் நேரத்தில் ஒட்டுசுட்டானில் லெப்டினன்ட் கேணல் ராகவன் வீரச்சாவு அடைய தாக்குதல் தொடர்ந்தது ...எதிரியானவன் திகைத்துபோய் தனது நிலைகளை விட்டு ஓடினான் ...நெடுங்கேணி வரை சென்ற வர்கள் மேலும் படையணி தேவைப்பட லெப்டினன் கேணல் குட்டிமணி ,லெப்டினன் கேணல் மணிவண்ணன்,லெப்டினன் கேணல் அக்பர் ,தலைமையில் இம்ரன்பண்டியன் படையணி இணைந்து கொள்கிறது இதில் இவனும் சேந்து தாக்குதல்களை தொடர்ந்தான் இவரு புளியங்குளம் வரை சென்று அங்கே எதிரியின் பலத்த எதிர்ப்பை சந்தித்து கடும் சண்டை புரிந்தார்கள் ...அங்கு நிலை எடுத்து இருந்தார்கள் அடுத்து எபபடி இதை உடைப்பது என்று தளபதிகள் ஆலோசித்தார்கள் ....எதிரியின் கடும் எறிகணைகள் விழுந்து கொண்டிருந்தது ....இதனால் எல்லா போராளிகளும் பதுங்கு குழிகளில் இருந்தார்கள் ...சில மணி நேரங்களின் பின்னர் ஓய்ந்திருந்தது ....இவ்வேளை அடுத்த அரணுக்கு செல்வதற்காக இவன் வெளிய வந்தான் ...இன் நேரம் பார்த்து கொடிய ஜமன் எறிகணை வடிவில் விழுந்து வெடித்தான்..வெளிய வந்த இவனை விட்டு வைக்க வில்லை கழுத்தில் துண்டு பட்டது அப்படியே விழுந்தான் ..இவனின் ஊரை சேர்ந்த நண்பனும் போராளியுமான கதிர் அவனை மடியில் வைத்திருக்க அன்புலன்ஸ் வண்டி மல்லாவி நோக்கி புறப்பட்டது ..மடியில் குறை உயிராக இருந்தவன் தான் எபபடி மன்னி நேசித்தானோ அதற்கு மேல் தன் தாயை நேசித்தவன் ...அம்மா அம்மா என்று கத்திய படி நண்பனின் மடியில் மண்ணையும் மக்களையும் விட்டு லெப்டினட் ஜனார்த்தனனாக வீரச்சாவடைந்தான் ........


இவனைபோல மண்ணுக்குள் உறங்கும் எங்கள் செல்வங்களின் கனவுகள் ஒருநாள் நனவாகும் ..




நன்றிகள்.


நண்பர்கள்
மாவீரன் லெப் கேணல் நிலவன் (கடற்புலிகள் தாக்குதல் தளபதி)
மாவீரன் லெப் கேணல் கெனடி (மறைமுக கரும்புலி)
மாவீரன் லெப் கேணல் இளந்தீபன்,பவான்(திலீபன்)
தவம்(போராளி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக