ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஐ. நா ஆலோசனைக்குழு விசா கோரவில்லை..

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா அனுமதி கோரி எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவிலுள்ள இலங்கை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.



இந்த நிபுணர் குழு இதுவரையில் எந்தவிதமான சம்பிரதாயமான கலந்துரையாடல்களையும் நியூயோர்க்கில் நடத்தவில்லை எனவும் அவர் கூறினார்.


3 பேரைக் கொண்ட நிபுணர் குழுவினர் இலங்கை விஜயத்தினை மேற்கொள்வதற்கான விஸா கோரவில்லை. ஆனால் அவர்கள் விஸா கோரினாலும் விஸா வழங்கப்பட மாட்டாது என ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழுவை நியமித்திருப்பதாகவும் இது விசாரணைக் குழு அல்ல எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார்.


இலங்கை செல்வதற்கான விஸா அனுமதி தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உண்மையைக் கண்டறிவதற்கு தடையேற்பட்டிருப்பதாகவும் நிபுணர் குழுவின் தலைவரான மர்சூகி தருஸ்மன் பி.பி.சி செய்திச் சேவைக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக