ஞாயிறு, 25 ஜூலை, 2010

கண்டுபிடித்தால் கூறுங்கோ எங்கே என் தலைவன் ...ஈழத்திலிருந்து ஒரு குரல்

தமிழ் வீரம் தமிழ்நாட்டின் புறநானூற்றில் மட்டுமல்ல
ஈழத்தில் பிரபாகரன் பரணியிலும் உண்டு
பரணிபாடும் தலைமகனின் மர்மம்தான் என்ன உண்டா இல்லையா
கடவுள் உண்டா இல்லையா நாம் கண்டதில்லை
கல்லைக்கண்டோம் சொன்னார்கள் நம்பினோம் கும்பிட்டோம்

முத்திபெற்றோம் பிரபாகரன் உண்டா இல்லையா
கடவுள் உண்டென்போரும் உண்டு இல்லையென்போரும் உண்டு
எல்லாம் அவரவர் நம்பிக்கைதான்
இனப்பற்றுள்ளோரும் தேவை என்றுணர்ந்தோரும் உண்டென்கின்றனர்
பச்சோந்திகளும் விடுதலை உணர்வற்றோரும் இல்லையென்கின்றனர்
பிரபாகரனின் தத்துவம் இல்லையென்கின்றது ஆனால்
காலம் மாறலாம் என்ற தத்துவம் தலைவன் கற்றானோ தெரியவில்லை
இத்தனை அழிவின் பின்னும் இழிவின் பின்னும் இழப்பின் பின்னும்
பலமிழந்தபின்னும் தமிழ்மானம் போனபின்னும் கவரிமான் உயிர்வாழுமா
அன்று தர்மத்திற்கானபோர் தர்மம் வெல்லுமென்றான்
இன்று அதர்மத்திற்கான போர் என்றான் விசுவமடுவில்
அதர்மம் வென்றுவிட்டது தர்மம் தலைசாய்ந்துவிட்டது
பிரபாகரனின் மரணத்திற்குச் சான்றிதழ் கிடையாது
கச்சேரியில் தேடினேன் திணைக்களகத்தில் தேடினேன் அமைச்சில் தேடினேன்
நீதிமன்றத்தில் கேட்டேன் அரசிடம் கேட்டேன் இந்தியாவில் தேடினேன்
இன்னும் கிடைக்கவில்லை
மரணத்தேதியும் சரியாய்த்தெரியாது தெரிஞ்ச்சாலாவது
கண்டுபிடிக்கலாம் என்று ஊரில் பளசுகள் சொல்லுது
பதினேளாம் திகதியாம் இல்லை பதினெட்டாம் திகதியாம்
இல்லை பத்தொன்பதாம் திகதியாம் என்று சொல்லினம்
சீவன் போனநேரம் அதுவும் சரியாய்த்தெரியாது
இடம் ஒன்றல்ல பலவுண்டு வெள்ளை முள்ளிவாய்க்காலாம்
இல்லை கொழும்பாம் விசவாயு அடிச்சினமாம் மன்மதனோ மயங்கினாராம்
அப்போதே மண்ணில் வீழ்ந்தாராம் கொழும்பு கொண்டுபோனதாம்
மகிந்தா கதைத்தாராம் சபதம் முடித்தாராம் தன்கையால்
தலையில் சுட்டாராம் என்று சொல்லினம் ஒருசாரார்
இரணைப்பாலை முற்றுகையுடன் வீரமரணத்துடன் வீரமரணத்தை
விரும்பினாராம் முள்ளிவாய்க்கால் வர மறுத்தாராம்
பொட்டம்மான் கட்டளையாம் சூசை செய்தாராம் குண்டுபட்டிடுமென்று
நிலத்தோடு நிலமாக கதவோடுகட்டி இழுத்துவந்து முற்றுகை உடைத்து
வில்லங்கமாய்த்தூக்கி வந்து முள்ளிவாய்க்காலில் வைத்து
நீர்மூழ்கியில் ஏற்றி வெளிநாட்டிற்கு அனுப்பியாச்சாம்
எங்கு இருக்கிறார் என்று தெரிந்தால் பலருக்குப் பிரச்சனையாம்
இராஜதந்திரப் பிரச்சனையாம் பாதுகாப்புப்பிரச்சனையாம்
ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலிலும் பிரச்சனையாம்
உடனே தெரிந்தால் தான் பிரச்சனையாம் காலம் மாறும்
மாற்றம் வரும் எப்பவும் எதுவும் நடக்கலாம்
இன்று சரத் உள்ளே மகிந்தா வெளியே நாளை
சரத் வெளியே மகிந்தா உள்ளே போகலாம் எதுவும் நாளை நடக்கலாம்
யார் கண்டது கனவு கண்ட டக்ளஸ் அல்ல குமரன் பத்மநாதந்தான் வெற்றிலையின் வேட்பாளரென்று
எதுவும் நாளை நடக்கலாம் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலா சீனாவின் நிகழ்ச்சி நிரலா
சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலா புலிகளின் அல்லது தமிழர்களின் நிகழ்ச்சி நிரலா
எதுவும் நாளை பிறக்கும் வாழும் இறக்கும் யார் நம்பினோம் புலி வீளுமென்று
ஏன் எழுமென்று நம்பமுடியாது எந்த நிகழ்ச்சிநிரலும்
பிறக்கும் வாழும் இறக்கும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்
உலக ஒழுங்கின் நியதி அதுதான் நவீன அரசியலின் தத்துவமும் அதுவே
கடவுள் உண்டென்போரும் உண்டு இல்லையென்போருமுண்டு
உண்டா இல்லையா ஆய்வு நடக்குது ஆதியும் அந்தமுமில்லை
அடியும் முடியுமில்லை கண்முன்னே கண்டவருமில்லை
புரியாத புதிராக தெரியாத அறிவாக ஆராயும் அறிவாக உள்ளார் அண்ணன்
சித்தர்களும் ஞானிகளும் கடவுளைக் கண்டினமாம் அங்கே
சீ.ஐ.ஏ யும்,எம்.ஐ.ஏயும்,மொசாட்டும்,ரோவும் பிரபாகரனைக் கண்டினமாம் இங்கே
ஆய்வுகள் செய்து மோப்பம் பிடித்து விட்டினமாம்
பிரபாகரன் உண்டா இல்லையா அது அவரவர்பற்றுக்கும் பக்திக்கும்
இடைப்பட்ட விடயம் பற்றுடையோர் உண்டென்கின்றனர்
விரக்தியுடையோர் இல்லையென்கின்றனர் தத்துவத்தால் ஆராயலாம்
பிரபாகரனின் கொள்கையால் ஆராயலாம்அரசியலால் ஆராயலாம் புலனாய்வால் ஆராயலாம்
உண்டென்றாலும் பிரச்சனை இல்லையென்றாலும் பிரச்சனை அப்ப என்னவென்று சொல்வது
காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் விழுந்தவர் எழலாம் எழுந்தவர் விழலாம்
எப்பவும் எதுவும் நிகலலாம் காலம் பதில் சொல்லும் நிட்சயம் நம்புங்கள்
உங்கள் வாழ்வில் என்றோ ஒரு நாள் ஆண்டவன் காட்சி தரலாம் அல்லது தராமலும் போகலாம்
எங்கின்றனர் சித்தர்களும் ஞானிகளும் முனிவர்களும்
உளவுத்துறை வல்லுனர்களும் இன்று அதையே சொல்கின்றனர்
சந்தர்ப்பத்திற்கேற்ப உண்டென்போருமுண்டு இல்லையென்போருமுண்டு
அரசியல்வாதிகளும் அதையே சொல்லினம்
தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சொல்லினமெண்டுதான் கிடக்கு
எனக்கும் குளப்பம்தான் சத்தியமாய்ச் சொல்கின்றேன் எனக்கும் தெரியாது
காலம் காட்டினால் பார்ப்போம் தலைவரின் கொள்கையில் வழிகாட்டலில்
அந்த இலட்சியத்திற்காய் பயணம் தொடர்வோம்
பிரபாகரனென்ற அந்தத் தீப்பொறி பற்றியெரியட்டும் பயணம் தொடர்வோம்.


நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக