செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தமிழனின் உயிர் குடித்த இராணுவ அதிகாரி சவேந்திரா டி சில்வா ஐக்கிய நாடுகளின் தூதுவரா?

வன்னி போரில் சரணடைந்தோர்களை சுட்டுக்கொன்ற இராணுவ தளபதி ஐக்கிய நாடுகளின் தூதுவராக செல்கின்றார். போரின் இறுதிப்பகுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடந்த போராளிகளான நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரை சுட்டுக்கொன்ற 58 வது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் கெனெரல் சவேந்திர சில்வாவே இவ்வாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர துணைத்தூதராக நியமிக்கப்படவுள்ளார்.


ஐக்கிய நாடுகளின் தற்போதைய இலங்கைக்கான பிரதி தூதுவரை மீள அழைக்கும் இலங்கை அரசு சவேந்திர சில்வாவை அனுப்புகின்றது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை முறியடிக்க இவரே சரியான ஆள் என இலங்கை படைத்துறை விளக்கம் வேறு அளித்துள்ளது.

இது மட்டுமல்ல கடற்படைத்தளபதி பிரித்தானியாவிற்கு தூதராக வருகின்றார். முன் நாள் தமிழர் படுகொலை சூத்திரதாரி ரத்வத்தை மலேசியா செல்கின்ரார். இவ்வாறு சிங்களம் ஒருபக்கம் சர்வதேசத்தின் முதுகின் மேல் ஏறி சவாரி செல்கின்ரனர்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களோ தம்மில் தாமே ஏறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு வீதிகளில் பொம்மல் ஆட்டம் ஆடுகின்றனர். மீண்டும் செல்வநாயகம் ஐயா சொன்னது போல கடவுள்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக