செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

யாரை கண்காணிக்க ராடரும்,வேவு விமானமும்...........

கொழும்பு இரத்மலானை விமானப்படை தளத்தில் அமெரிக்கா, தனது செலவில் நவீன ராடர் கருவி ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த நவீனரக ராடர், செய்மதியூடாக தொலைத் தொடர்புகளையும், தரவுகளின் பரிமாற்றங்களையும், துல்லியமாக அறியும் திறன்கொண்டது எனக் கூறப்படுகிறது. பீச் கிராப் என அழைக்கப்படும், ஆளில்லா வேவு விமானங்களையும் அவதானித்து இதனூடாக் கட்டுப்படுத்தமுடியும் என அமெரிக்க தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க விமானப்படை இலங்கை விமானப்படைக்கு 674 மில்லியன் ரூபா பெறுமதியான விமானப்படை உபகரணங்களை வழங்கியுள்ளது. இடர் முகாமைத்துவம், ஆட்கடத்தல், பயங்கரவாத ஒழிப்பு ஆகியவற்றுக்க்காக இலங்கை கடல் எல்லைகளை கண்காணிக்கவே இந்த உதவி என அமெரிக்க கூறியுள்ளது.

ரியல் டைம் டேட்டா லிங்க் சிஸ்டம்' [Real Time Data Link system ] என்ற அதி நவீன கண்காணிப்புக் கருவித் தொகுதிகளை சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் ஆழ்கடலில் நகர்வுகளை கண்காணிப்பதற்கும், கண்காணிப்பை அதிகப்படுத்துவதற்கும், சிறிலங்காவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக