சனி, 11 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் ....

ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கிய விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஆவணங்கள் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் அதி நவீன பாதாள அறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.



ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் அருகே உள்ள மலைப்பகுதி ஒன்றிலுள்ள மகா பெரிய கிரானைட் பாறை ஒன்றை குடைந்து, பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் பையனென் என்ற தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.


ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்டுகளை போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக ஸ்வீடன் தொழில்நுட்ப ஆய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த தகவல் மையத்தில் உள்ள சூப்பர் செர்வர்கள் பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை வழங்கிவருகிறது. இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடி கதவுகள், மரவேலைபாடுகளுடன் அமைந்த அறைகள் போன்றவை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக