சனி, 11 டிசம்பர், 2010

கேட்பவன் கேணையனாக இருந்தால் சொல்பவனுக்கு என்ன ?ஜனாதிபதி ஒக்ஸ்பேட்டில் பேசியிருந்தால் தீர்வு வந்திருக்குமாம் !

லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரையில் இலங்கைக் கான அரசியல் தீர்வு குறித்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறவிருந்தேன். ஆனால் உள்ளூர் சக்திகள் சர்வதேச சக்திகளுடன் இணைந்து அதைத் தடுத்துவிட்டன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத் தில் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான
விவாதத்தின் இறுதி நாளான நேற்று ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து பதில் அளித்தார். அவர் தொடர்ந்து பேசியவை வருமாறு:
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த நான் இறுதி நாளான இன்றும் விவாதத்துக்கு பதிலுரை அளிக்க வேண்டும் என்ற பொறுப்புடன் இங்கு வந்திருக்கிறேன்.
இந்த விவாதத்தின்போது சபையில் இரு தரப்புக்களிலும் முன்வைக்கப்பட்ட ஆரோக்கிய மான ஆலோசனைகளை கவனத்துடன் மறுபரிசீனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சிலர் விமர்சிக்கின்றனர். நாட்டில் அமைதியை சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை முறியடிக்க வேண்டியது எமது தலையாய பொறுப்பு. மீண்டும் ஒரு கிளர்ச்சியையோ அமைதியற்ற நிலை மையையோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
உள்நாட்டில் எமது படையினர் மத்தியிலும் குழப்பங்களை உருவாக்கி கிளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் ஒன்று அரசி யல் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. படைப் பிரிவினர் இவ்விடயத்தில் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நாம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நட வடிக்கைகளை முறியடிக்க உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் சூழ்ச்சி செய் கின்றன. அதற்கு இனவாதம் சாயம் பூசு கின்றனர்.
யுத்தம் முடிவுற்ற நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் 88 சதவீதமானது படையினரின் சம்பளம், உணவு மற்றும் சீருடை போன்றவற்றுக்குச் செலவிடப் படுகின்றது.
வடக்கில் படையினர் கண்னிவெடிகளை அகற்றுவதுடன், மீள்குடியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள நிவாரண நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாதிருப்பதற்கான முதலீடா கும்.
லண்டனில் எனது உரையைத் தடுப்பதற்கு எடுத்த முயற்சியின் மூலம், இந்த நாட்டில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாவதற்கே வழிவகுக்கும்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரையில் நான் இனப் பிரச்சினைத் தீர்வு குறித்து சர்வதேசத் துக்கு அறிவிக்கவிருந்தேன். ஆனால் உள்ளூர் சக்திகளுடன் சர்வதேச சக்திக ளும் அதைக் குழப்பிவிட்டன.
படையினரின் மனிதாபிமான நட வடிக்கையையே யுத்தக்குற்றச்சாட்டுகள் என்று கருதுகின்றனர். கடந்த காலத் தில் தேசிய பாதுகாப்பு சரியாகத் திட்ட மிடப்பட்டிராமையே நாட்டில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்.
பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தவறா? அதிகரிக் கப்பட்ட சம்பளம் படையினருக்கும் வழங்கவேண்டும் தானே.
படையினர், மேற்கொண்ட மனிதாபி மான நடவடிக்கைகள் மூலம் புலிகளின் 26 வருட பயங்கரவாதச் செயற்பாடு முற் றாகத் தோற்கடிக்கப்பட்டது. இதனால், 2010இல் இலங்கை முழுமையான நாடா கியது. நிதிப் பலம், நிம்மதி, அச்சமில் லாத வாழ்க்கை மற்றும் உயிர்பாதுகாப் புப் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.
படையினரிடையே அமைதியின்மை யையும் சந்தேகத்தையும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு இடம்கொடுக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டில் நிலவும் சமாதானத்தை வேறு பக்கத்திற்குத் திருப்புவதற்கு நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை என்று இன வாதக் கருத்துக்களைத் திணித்து இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ள நல்லவற்றைத் திசைதிருப்ப முயற்சிகள் செய்யப்படுகின்றன. என்றார் ஜனாதிபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக