சனி, 11 டிசம்பர், 2010

தீர்வுக்காக ஒன்றிணைந்து செயற்பட தமிழ்க்கட்சிகள் அனைத்தும் இணக்கம் 6 பேர் கொண்ட குழுவும் நியமனம்??

இனப்பிரச்சினைக்குப் பொருத்த மான ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் வகையில் இணைந்து செயல்பட தமிழ்க் கட்சிகள் அனைத் தும் இணங்கி உள்ளன. பொதுத் தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டும் வகையில் அடிப்படைக் கொள்கை களில் இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் ஆரா´வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப் பட்டுள்ளது.





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் நேற்று கூட்டமைப்புத் தலைவர் களைச் சந்தித்துப் பேசினர்.




"தீர்வுக்கான அடிப்படைகளில் இணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம். அதற்காக கூட்டமைப்பு சõர்பில் மூவரும் தமிழ்க் கட்சி களின் அரங்கத்தின் சõர்பில் மூவ ரும் அடங்கிய குழு ஒன்று நியமிக் கப்பட்டுள்ளது' என்றார் கூட்ட மைப்பின் பேச்சõளரும் நாடாளு மன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.




தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சி னைகளுக்குத் தீர்வு காணும் வகை யில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து செயலாற்றுவது என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செ´யப்பட்டுள்ளது.




கூட்டமைப்பின் கொழும்பு அலுவல கத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பித்த கூட் டம் இரண்டு மணி நேரம் நீடித்தது.




"இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்குள் ஒரே கருத்து நிலவுகிறது. ஆனால், அரங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைக் கொண் டுள்ளன. எனவே தீர்வுக்கான அடிப் படைகள் குறித்து அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஓர் இணக் கப்பாட்டைக் கொண்டுவருவதற்கான முயற்சியே இப்போது மேற்கொள்ளப் பட்டுள்ளது' என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.




"தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரிக் கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது நிலைப் பாட்டை எட்டுவதற்கு இரு தரப்புக் களும் இணைந்து செயற்படுவது என முடிவு செ´யப்பட்டது' என்றார் முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம்.




இதற்கென அமைக்கப்பட்டுள்ள அறுவர் கொண்ட குழு தீர்வு குறித்துக் கலந்துரையாடி தனது சிபாரிசுகளை இரண்டு மாத காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று, அதாவது இந்தியா செல்லும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாடு திரும்புவதற்கு முன்ன தாக முன்வைக்க வேண்டும் என்று முடிவு செ´யப்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங் கம் கூறினார்.




விசõரணைகள் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடு தலை, இராணுவ முகாம்கள் அமைப்ப தைத் தடுத்தல், மீள்குடியமர்வு போன்ற பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பு களும் இணைந்து செயற்படுவது என் றும் முடிவு செ´யப்பட்டது.




"தமிழ்க் கட்சிகள் யாவும் ஓரணியில் நின்று முன்வைக்கும் யோசனையை அரசு ஒருபோதும் நிராகரிக்க முடியாது' என்று கூறிய சிவாஜிலிங்கம், ஒன்று பட்டு நிற்கிறோம் என்ற விடயத்தை சர்வதேச சமூகத்திற்கும் இதன் மூலம் தெரிவிக்க முடியும் என்றார்.




நேற்யை கூட்டத்தில் கூட்டமைப் பின் சõர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் களான மாவை ÷சனாதிராசõ, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், அ. விநாயகமூர்த்தி, வினோ நோகராகலிங் கம், எஸ்.செல்வராசõ, ஏ.அரியநேந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்க் கட்சிகளின் அரங் கத்தின் சõர்பில் தமிழர் விடுதலைக் கூட் டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலை வரும் கிழக்கு மாகாண முதலமைச்சரு மான சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத் தலைவர் எஸ்.சந்திரஹாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.சிறீதரன், சிறி ரெலோ அமைப்பின் பிரதிநிதி உதயராசõ, சுரேந்திரன், ஈ.பி.ஆர்.எல். எவ் (பத்மநாபா) செயலாளர் எஸ். சிறீ தரன், அம்பாறைத் தமிழர் மகா சபைப் பிரதிநிதி எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். ஈ.பி.டி. பியின் சõர்பில் அமைச்சரும் நாடாளு மன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவா னந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர குமார் ஆகியோரும் கலந்து கொண்ட னர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக