திங்கள், 27 டிசம்பர், 2010

விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைதாகின்றனர்

புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப் பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் விசாரணைக்கென்று காரணம் கூறப்பட்டாலும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது. யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் சரணடைந்த பல போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
 எனினும் இவ்வாறு விடுவிக்கப் பட்டவர்கள் சிலர் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாத சிலரால் விசாரணைக்கென்றும் சில சமயங்களில் காரணம் எதுவும் கூறப்படாமலும் அழைத்து செல்லப்படுகின்றனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்தில் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் சில இடங்க ளில் நடந்துள்ளது.மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்னமும் பலர் தமது இருப்பிடத்திற்கருகில் உள்ள படைமுகாம்களில் கையயழுத்திடுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக