திங்கள், 27 டிசம்பர், 2010

புலிகளின் தொழில்நுட்பத்துடன் கடற்படைத்தாக்குதல் படகுகள் - வெளிநாட்டுச் சந்தையில் கிராக்கி

இறுதிக் கட்ட போரின்போது விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்துபோன இன்னொரு விடயம்தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும்.அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள்  என்பவற்றைக் கொண்டு கடந்த வருடம் தொடக்கம் கொழும்பை அண்மித்த வெலிசறவில் இயந்திரப் படகு தயாரிக்கும் திட்டத்தை கடற்படை ஆரம்பித்தது.
தற்போதைய நிலையில் நூற்றுக்கும் அதிகமான அதிவேக தாக்குதல் படகுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் புலிகளின் அதிவேக தாக்குதல் படகுகளின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போதைக்கு பல நாடுகளில் காணப்படும் தாக்குதல் படகுகளை விட இவற்றின் வேகம் அதிகமாகவுள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் நாட்களில் கடற்படையின் தயாரிப்பான அதிவேக தாக்குதல் படகுகள் வெளிநாட்டுக் கண்காட்சி களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அதன்பின் அவற்றை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக