புதன், 29 டிசம்பர், 2010

சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே,வழங்கி வருகின்றனர்

யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதற்கான பயிற்சியை படை அதிகாரிகள் சிலரே, நேரடியாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். சர்ச்சைக்குரியவகையினில் நடந்து முடிந்த, தேசிய அனர்த்த தினத்தினில் முன்னதாக தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதத்தினைப் பாட தாம் முடிவெடுத்திருந்ததாக தமிழ் அதிகாரியொருவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். சிங்கள மொழியில் ஆரம்பித்து அடுத்த வரிகளை தமிழென மாறிமாறி பாடவே மாணவர்கள் பயிற்றப்பட்டிருந்தனர். 
எனினும், தேசிய அனர்த்த தின நிகழ்வினை ஒருங்கிணைக்கவென, அரச உயர்மட்டத்தால் அனுப்பப்பட்ட சிங்கள அதிகாரியொருவர், தனிச் சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாட உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.  அரச உயர் மட்ட பணிப்பு இதுவெனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே படை அதிகாரிகளது நேரடி வழிநடத்தலில், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவ மாணவிகளுக்கு அவசர அவசரமாக இரவு, பகலாக தேசிய கீதத்தைப் பாட, பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் பௌத்த மதகுருவொருவர் சிங்கள மொழியை மாணவர்களுக்கு கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரோ தனது மாணவர்களுக்கு சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பயிற்றுவிக்க
மறுத்துவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக