திங்கள், 15 பிப்ரவரி, 2010

ஹெலிகாப்டர் மலையில் மோதி 10 பேர் மரணம்

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டது. தற்போது அவர்களுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏமன் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அங்குள்ள வடக்கு மலைப்பகுதிக்கு நேற்று புறப்பட்டு சென்றது. அதில் ராணுவ வீரர்களும் இருந்தனர். திடீரென இந்த ஹெலிகாப்டர் சானா நகர் பகுதியில் உள்ள கஹியன்மலையில் மோதி நொறுங்கியது. எனவே, இதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 10 பேர் அதே இடத்தில் பலியானார்கள். இந்த விபத்துக்கு எந்திர கோளாறு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. இருந்தாலும் இது கலவரக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக