திங்கள், 15 பிப்ரவரி, 2010

விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க வேண்டும்

விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர். அவற்றில் பெருமளவானவற்றை நாம் முறியடித்துள்ளோம், எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்பட வேண்டும் என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு செயலாளராகிய நான் நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளேன். விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர். அவற்றில் பெருமளவானவற்றை நாம் முறியடித்துள்ளோம், எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்பட வேண்டும். எமது படையினர் எவ்வளவு தரமானவர்கள் என்ற புரிந்துணர்வுகள் மக்களிடம் இல்லை. கிழக்கு மாகாணத்தில் இராணுவம் நிலைகொணடிருக்க வேண்டும் என பெருமளவான மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் காவல்துறையினர் அங்கு நிலைகொள்வதை விரும்பவில்லை. நாம் பயிற்சி பெற்ற இராணுவத்தை கொண்டுள்ளோம் அவர்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகம் பங்குகொள்ள முடியும். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. பொன்சேகாவை நாம் கடற்படைத் தளத்தில் தடுத்து வைத்துள்ளோம். அவரை சிறையில் அடைக்கவில்லை, அவருக்கு ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது. அது முன்னர் கடற்படை தளபதியால் பயன்படுத்தப்பட்டது. அது ஒரு ஆடம்பரமான மாளிகை. பொன்சேகா அரச தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் கூட எமக்கு இவ்வாறான வசதிகளை தந்திருக்கமாட்டார், ஏன் மகிந்தா ராஜபக்சாவுக்கும் வழங்கியிருக்கமாட்டார். பொன்சேகாவும், அவரின் மனைவியும் பொய்கூறுகின்றனர். பொன்சேகாவின் ஆதரவாளர்களும் பொய் கூறுகின்றனர். பொன்சேகா மீதான இராணுவ விசாரணைகள் உடனயடியாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக