சனி, 1 மே, 2010

5000 ரூபாயுடன் வன்னி மக்களை குடியேற்றும் சிறிலங்கா.........


வன்னியில் சிறீலங்கா கொடுத்த இன அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு போரினால் இடம்பெயர்ந்து தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு கடும் சோதனைகள் விசாரணைகளுக்கு பின்னர் குடியேற்றப்படும் மக்கள் தொடர்ந்தும் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக வன்னியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குடியேற்றப்பட்ட மக்கள் பலர் சரியான நிவாரண உதவிகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகள் இன்றி மிகவும் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கு இதுவரையில் நிவாரணமாக வெறும் 5000 ரூபா பணமே வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னேரிக்குளம் மற்றும் முல்லைத்தீவின் பல பகுதிகளில் இவ்வாறு மக்கள் அவதிப்படுவதாகவும், அவர்களுக்கான நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டிய தேவைகள் இருந்தும், அதை செய்வதற்கு அரச கட்டுப்பாடுகள் இருப்பதால், அதை செய்யமுடியாமல் உள்ளதாக தொண்டு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக