சனி, 1 மே, 2010

புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிக்க விசேட புலனாய்வு நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு விசேட புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனை அழித்தொழிக்கும் நோக்கில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோல்வியை தழுவிய போதிலும், புலம்பெயர் தமிழர்க் ஈழ இராச்சிய கனவை மெய்ப்பிக்க முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடவடிக்கைகளை பூரணமாக தடுத்து நிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சும், புலனாய்வுப் பிரிவினரும் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்ட நாடுகளின் தூதுவராலயங்களில் இராணுவ அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனையிறவில் படைவீரர் நினைவுத் தூபி அங்குரார்ப்பண வைபவத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போ அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக