சனி, 1 மே, 2010

தென்னிலங்கை நிதிநிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கையின் நிதி நிறுவனங்களை திறப்பதற்கு, சிவில் அமைப்புகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றன. யாழ்ப்பாண மக்களின் நிதி பொருளாதாரத்தை சீர்குலைக்கும் இலக்குடன் தென்னிலங்கை நிதி முதலீட்டு நிறுவனங்கள் அங்கு திறக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் அந்த நிறுவனங்களுக்கு அனுமதிகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் போலியான தொழில்வாய்ப்புகளை முன்வைத்து
பாரிய நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. அத்துடன் இலங்கை அரசாங்கம் உண்மையில் யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சிக்காக செயற்படவில்லை எனவும், யாழ்ப்பாணத்தின் நிதி நிலைமைகளை இல்லாது செய்வதற்காகவுமே செயற்படுவதாகவும் அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக