செவ்வாய், 11 மே, 2010

சவால்கள் பலவற்றை எதிர்கொண்டவாறு களம் புகும் நாடுகடந்த தமிழீழ அரசு


கூட்டுச் சதிகள் - நம்பிக்கைத் துரோகங்கள் - அவதூறுகள் - வன்மப் பிரச்சாரங்கள் - அச்சுறுத்தல்கள் - கொலை மிரட்டல்கள் என சவால்கள் பலவற்றை எதிர்கொண்டவாறு சுதந்திர தமிழீழத்துக்கான இலக்கு நோக்கிய பயணத்தில் களம் புகும் நாடுகடந்த தமிழீழ அரசு. ஆக்கபூர்வமான விமர்சனத்தை நாம் வரவேற்கவே செய்கின்றோம்.கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள், ஆய்வுகள், ஆக்கபூர்வமாக அமையும் பட்சத்தில் புரட்சிகரமான சித்தாந்தப் பார்வை கூர்மையடையும், அரசியல் விழிப்புணர்ச்சி விசாலமடையும். ஆனால் பொய்களைப் புனைந்து உண்மைகளைத் திரித்துக் காட்டி விதண்டாவாத விமர்சனங்கள் செய்து ஒரு புனிதமான செயற்பாட்டு அமைப்பின் மீது சேற்றை வாரி வீசுவது நேர்மையான அரசியற் செயற்பாடு அல்ல. இது மிகவும் கீழ்த்தரமான நாசகார மக்கள் விரோத அரசியல் சந்தர்ப்பவாதமாகும். எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது உயிருள்ளவரை எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். தனிவழிப் பயணம்தான்... தயங்கோம் எது வந்து எதிர்த்தாலும்... மயங்கோம் வாழ்வை நிமிர்த்தும்.. வழியில் செல்ல... மறுக்கோம் மாவீரர்களே, உங்கள் கல்லறை மீது சபதம் எடுக்கின்றோம்: மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக