செவ்வாய், 11 மே, 2010

பன்னிரண்டு மாதங்களோ போதவில்லை - தமிழன் தரணியாண்டு மடிந்த கதை கொஞ்சமில்லை - ஈழ முள்ளிவாய்க்கால் விழுந்தது காண் இந்த மாதத்தில் - நாம் தள்ளி நின்றே பார்த்திருந்தோம் கடந்த வருடத்தில்! துளி நீருக்கே என் குலமோ தவமிருந்தது - ஒரு பிடி சோற்றுக்கே என் குழந்தை பழியிருந்தது; விழி நீர் வழியே உயிர் வழியக் காத்திருந்தது - பெரு இன அழிப்பின் உச்சத்திற்கு சாட்சியானது! முள் வேலிக்குள் ஒரு ராச்சியமே சிறையானது - சிறு கூட்டுக்குள் என் தேசம் சிக்கிச் சிதைந்தது! - சிங்கள வல்லூறுகள் குலக் குஞ்சுகளைத் தின்று தீர்க்க் - தன் மகளை இந்தியத் தந்தை கூட்டிக் கொடுத்தான்! பாரதத்தின் கண்களதை கறுப்புத் துணி மறைத்தது - உலக சரித்திரத்தில் தன்னினமே தன்னை அழித்தது; எட்டப்பக் கூட்டங்களின் இடையினில் சிக்கி - ஆறு கோடிகளோ ஆட்டு மந்தைகளாய் மாறி நின்றது! தன்னாட்டைக் காக்கவொண்ணா இந்திய தேசம் - எட்டி சிங்களத்தின் சிறு பரப்பில் காவலிருந்தது; தொப்புள் கொடி இரத்தமது காய முன்னமே - எம் கருவறுத்து உருச்சிதைத்து கெக்கலித்தது! ஆதித் திராவிடர்கள் ஆண்டிருந்த மண்ணில் வீடில்லை, வீதியிலே நிற்குதம்மா பிள்ளை! செங்கோலின் ஒளியதிலே திளைத்திருந்த ஆட்சி மண் வீழ்ந்து மறமழிந்து போனதம்மா இனியில்லை! துரோகங்கள் மீள் பதிவை இட்டுச் சென்றதம்மா - எம் குரோதங்களின் மேல் தணலைக் கொட்டிச் சென்றதம்மா! பாரதத்தின் துரோகம் நீள நாமும் வீழ்ந்திட்டோம்; - அவன் சோரம் போனதால் எங்கள் நாடிழந்திட்டோம்! சிங்களத்தின் வாளில் தலை மாட்டிய போதும் - நாம் செங்களத்தில் வீரமதை இழக்கவேயில்லை! வெங்களமாய் எரியுதம்மா எங்களின் உள்ளம் - அதில் செங்குளமாய்க் கொதிக்குதம்மா எங்களின் இரத்தம்! எங்கள் வீரம் அழியாது அது கூடப் பிறந்தது - மறத் தமிழன் கனவு கலையாது அது உயிரில் கலந்தது; நாலு சுவர் தடுக்காது எங்களின் படையை - தமிழ் ஈழ மண் ஏற்காது சிங்களப் பேயை! வென்றெடுப்போம் எங்கள் தேசம் அது தூரமில்லை; வேரறுப்போம் எதிரியின் குலம் அது கனவுமில்லை! பொங்கியெழும் எந்தன் இனம் பெற்றெடுக்கும் ஈழம்! - அங்கு முழங்கிஎழும் சங்கின் நாதம் மாவீரர் பெயர் சொல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக