செவ்வாய், 11 மே, 2010

தலைவன் இருக்கிறான் புலம்ப வேண்டாம்!!!

யுகங்களை கடந்து நீ உயிர் வாழ்கிறாய், மொழியாய். மண் துகள்களில் உன் ஜீவன் மரணிக்காமல் இருக்கிறது, இனமாய். காற்று, நிலத்தை இட மாற்றம் செய்ய முடியுமா? நம் இனத்தின் முடிவை அடக்குமுறை முடிவு செய்யாது. முடிவு என்று ஒன்றுமே இல்லை. ஒவ்வொரு முடிவும் தொடக்கம். ஒவ்வொரு இறுதியும் வேறொன்றின் ஆரம்பம். அழிவு ஆற்றலை வெளிப்படுத்தும். அணு சிதறும் போதுதான் ஆற்றலாகிறது. நாம் சிதறும் போதுதான் அணுவானோம். இது புலம்பும் காலமல்ல. புறப்படும் காலம். இது முடிவு காலமல்ல. தொடக்கக் காலம். நம்மை நாம் அடையாளம் பார்த்தநாள். நம்மை நாம் தெரிந்து கொண்ட நாள். நம்மையே நாம் தேர்வு செய்த நாள். புலம்ப வேண்டாம். புறப்படுவோம். வெற்றி நம் பக்கத்தில். நம் தலைவன் இருக்கிறார். கலங்க வேண்டாம். நமக்கான நாடு நிச்சயிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டது. அதை ஆளும்காலம்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். அதை காலம் தீர்மானித்து விட்டது. நாம் தான் கையில் எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக