சனி, 12 ஜூன், 2010

வன்னியில் இடம்பெறும் பயங்கரம் குரல் கொடுக்கத் தயாராகவேண்டும்- வலம்புரி

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்து முடிந்த பெரும் போருக்குப் பின்னர் இப்போது மீள்குடிய மர்வு இடம்பெறுகின்றது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், தங்கள் சொந்த மண்ணில் குடியேறுவதை தவிர தங்கள் வாழ்க்கைக்கு வேறு ஆதாரம் இல்லை என்ற கட்டாயத்தில் மீள்குடியமர்வில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.



இருந்தும் வன்னியில் மீள் குடியமரும் மக்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்படவில்லை.பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுவதான நிலைமை அங்குள்ளதெனில், மக்களின் அவலநிலை எத்தகையதென்பதை ஊகித்தறிவதில் எந்தக் கஷ்டமும் இருக்க முடியாது. எனவே வன் னியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் பாது காப்புத் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அரசின் கட்டாய கடமையாகும்.


யுத்தத்தில் பெற்ற வெற்றி என்பது ஓர் இனத்தை நசுக்குவதற்கானதாக இருக்குமாயின், அந்த வெற்றியின் அனுபவிப்பால் ஈற்றில் கிடைப் பது துன்பமேயன்றி வேறு எதுவும் இல்லை என்பது உணர்தற்குரியது.


முப்பது வருட கால யுத்தத்தில் அடையப்படும் வெற்றி எதுவாக இருக்குமெனில், எல்லா இன மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகும்.இருந்தும் துரதிர்ஷ்ட வசமாக தமிழ் மக்களை அரசு மாற்றுக் கண்கொண்டே பார்க்கின்றது. தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள், இந்த நாட்டில் மிகப்பெரியதொரு போட்டி இருக்குமாயின் அது, சிங்களவர்-தமிழர் என்ற இனத்துவப் போட்டி என அரசு கருதுகின்றது.


இதன் காரணமாகவே தமிழர் பகுதிகளில் உள்ள அரச மரங்களிலெல்லாம் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்கின்றது.சாதாரணமான நிலையில் நின்று இது பற் றிச் சிந்தித்தால் அரசின் செயல் எந்தளவு தூரம் சிறுமைத்தனமுடையது என்பதை உணர முடியும்.


ஜனநாயக அரசு, ஜனநாயக நாடு என்ப தெல்லாம் வெறும் பேச்சளவிலாக அமையுமாயின் எதிர் காலத்தில் ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். ஆக, வன்னிப் பெரு நிலப்பரப்பில் மீளக் குடிய மரும் மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உறவுகளை பறிகொடுத்து விட்டு குடிசைக்குள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் அபலைப் பெண்கள் மீது விடும் சேஷ்டை இந்த நாட்டை கண்ணீரில் மிதக்க வைக்கும். இதற்குப் பாத்திரமானவர்கள் நிச்சயம் வருந்த நேரிடும் என்பதால் அனைவரும் விழிப்பாக இருந்து வன்னி மக்களின் நலனில் கரிசனை கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக