சனி, 12 ஜூன், 2010

டெல்லி சென்று இந்தியாவுடன் மஹிந்த ஏழு ஒப்பங்தங்களை கையெழுத்திட்டார். அதே போல சீனாவுடனும் ஏழு ஒப்பதங்களை சிறிலங்கா செய்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீனப் பதில் பிரதமர் சியாங் டிஜியாங் சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தபோதே இந்த 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.


இதன்படி, இலங்கை - சீனா இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு, அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான உதவி, தென் மாகாணத்தில் அதிவேக பாதை அமைத்தல், தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான உதவி வழங்குதல் உள்ளிட்ட மேலும் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.


அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒருமைப்பாடு, ஏற்றுமதி மற்றும் விமான சேவை என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இவை குறித்து இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக