செவ்வாய், 8 ஜூன், 2010

மீள்குடியமர்ந்த மக்கள் அலைக்கழிப்பு..

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தமது மீளக்குடியமர்வு நிதியைப் பெறுவதற்காக வங்கிகளால் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மீளக்குடியமர்ந்த மக்களும் அதற்கான நிதியாக 20ஆயிரம் ரூபா இலங்கை வங்கியின் ஊடாக வழங்கப்படுகின்றது. இதனைப் பெறுவதற்காக மீளக்குடியமர்ந்தகுறிப்பாக கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால், தூரப்பகுதிகளிலிருக்கும் மக்கள் தினசரி பல இடர்பாடுகளும் மத்தியில் வந்து கிளிநொச்சி நகரிலுள்ள இலங்கை வங்கிக் கிளையின் முன்னால் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.இதேவேளை, பதிவுகளை மேற்கொள்ள ஒரு தடவையும் பணத்தைப் பெற மற்றொரு தடவையும் மக்கள் இங்கு வந்து செல்லவேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய தரப்புகள் கூடிய கவனமெடுக்கவேண்டும். இம்மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தபோது தமது வங்கிகளில் வைப்புச் செய்யுமாறு கேட்டு பல வங்கிகள் முகாம்களுக்கு வந்தன.ஆனால், தற்போது அந்த மக்களின் நலன்கருதி தூர இடங்களில் உள்ள மக்களுக்காக ஒரு நடமாடும் சேவையை நடத்தக் கூடத் தயாராக இல்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக