செவ்வாய், 8 ஜூன், 2010

காவல்துறையால் கைது ,,,,,,,,,

இனவெறியன் ராசபக்சே இந்தியா வருவதை கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக இலங்கை துணைத் தூதரகத்தின் முன் ஆர்ப்பட்டம் நடத்த முயன்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்
பழ.நெடுமாறன், ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், பத்திரிக்கையாளர் எம்.நடராசன், தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பி.மணியரசன், தோழர் தியாகு, இயக்குநர் டி.ராசேந்தர், எழுத்தாளர் கண்மணி, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, இளைஞர் பெருமன்ற தமிழ் மாநில செயலாளர் டி.லெனின், மாணவர் பெருமன்ற துணைச் செயலாளர் திருமலை ஆகியோருடன் ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வில் கருணாநிதியின் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள். இதைப்போன்றே சென்னை சாஸ்திரி பவன் முன்பு முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தலைமையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டார்கள். இதைத் தவிர தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே பெரும் எழுச்சியுடன் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. சிங்கள தேசிய கொடி எரிக்கப்பட்டது. ஆனால் தமிழர்களின் உணர்வுகளை சோனியாவின் தலைமையும், கருணாநிதியின் மனநிலையும் ஏற்குமா என்பதை நாம் தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக