வியாழன், 30 டிசம்பர், 2010

யுத்த குற்றவாளி சவேந்திர சில்வாவை பாராட்டும் வகையில் அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்புச் செய்துள்ளது

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும்;, 58ம் படைப்பிரிவின் பொறுப்பதிகாரியுமான மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு, அரசாங்கம் காணியொன்றை அன்பளிப்பு செய்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இவ்வாறு காணித் துண்டொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சாவேந்திர சில்வாவிற்கு காணி வழங்கும் யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது இதன்படி, மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு பத்தரமுல்ல பிரதேசத்தில் 24 பேர்சஸ் காணியொன்று வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முப்படைத் தளபதிகளுக்கும் அரசாங்கம் இவ்வாறு கொழும்பில் காணிகளை வழங்கியிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக