வியாழன், 30 டிசம்பர், 2010

இலங்கை தமிழ் அகதிகளை நாடுகடத்த கூடாது .சர்வதேச மன்னிப்புச் சபை

அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் அவுஸ்திரேலியா இலங்கைக்கு நாடுகடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்கானிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக த ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை புலனாய்வுத்துறையின் தகவல் அடிப்படையில், இலங்கை தமிழ் அகதிகள் பயங்கரவாதத் தொடர்பு கொண்டவர்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பில் அவுஸ்திரேலியா விளக்கமளிக்க வேண்டும் என, அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை கோரியதைத் தொடர்ந்து, மன்னிப்புசபை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. கடந்த வருடம் ஓசியானிக் வைக்கிங் கப்பல் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 78 அகதிகளுள், 10 பேர் ரோமானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடியேற்ற நடவடிக்கைகள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், எந்த நிலையிலும் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாது என அவுஸ்திரேலியாவை, மன்னிப்;புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கும் பட்சத்தில், அது சர்வதேச அகதிகள் சட்டத்தை மீறுவதாக அமையும் என, அதன் இயக்குனர் என்றுவ் பெஸ்விக் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக