வியாழன், 30 டிசம்பர், 2010

மீசாலையில் கொலை செய்யப்பட்டவர் முன்னாள் போராளியா ??.

யாழ்ப்பாணம் மீசாலையில்  சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்தவரென்பதுடன் நலன்புரி நிலையத்திலிருந்து அண்மையில் விடுவிக்கபட்டவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மீசாலை வடக்கை சேர்ந்த இவர் கடந்த காலத்தில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின்போது இடம பெயர்ந்து சென்று கிளிநொச்சி உருத்திரபுரத்திற்கு சென்று அங்கு விவசாய செய்து வந்துள்ளார். உருத்திரபுரத்திலேயே தொடர்ச்சியாக அவர் கடந்த காலங்களில் வசித்ததுடன் வன்னியில் இடம் பெற்ற யுத்தகாலத்தில் அங்கிருந்து இடம் பெயர்ந்து அதன் பின்னர் வவுனியாவிற்கு இராணுவக் கட்டுப்பட்டு பகுதிக்குச்சென்றார்
.
மிக அண்மையிலேயே இவருக்கு குழந்தை பிறந்ததெனவும் அப்பிள்ளைக்கு தற்போது 3 மாதங்களே நிறைவு பெற்றுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.நலன்புரிநிலையத்திலிருந்துவிடுவிக்கபட்ட
பின்னர் யாழ்ப்பாணம் வருகைதந்து இங்கும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதுடன் தென்பகுதியிலிருந்தும் வாகனங்களை கொண்டுவந்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வாழந்து வந்துள்ளார். இந்நிலையிலேயே இவர் கடந்த 27 ம் திகதி காணாமல் போய் பின்னர் வேம்பிராய் இந்து மாயானத்திற்கு அண்மையிலுள்ள காளிகோயிலடியின் பின்பற்றை ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 சடலமானது இனங்காணும் போது கழுத்து துண்டிக்கப்பட்டிருந்தது. போல் நெருக்கபட்ட நிலையில் தலையிலும் கை கால்களில் கடுமையாக தாக்கபட்ட அடையாளங்களோடும் உள்ளாடையோடு மாத்திரம் நிலத்தில் கிடங்கு வெட்டப்பட்டு அரைகுறையாக புதைக்கபட்ட நிலையிலேயே இனங்காணப்பட்டதாக சடலத்தை அடையாளங்காட்டிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
 இவரது இறுதிக்கிரிகைகள் மீசாலை கொற்றப்புலவு இந்துமாயானத்தில் நடைபெற்றதுடன் இச்சம்பவம் அப்பகுதி முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி ஏற்கனவே சாவசக்சேரியில் வர்த்தகர் ஒருவரின் மகன் ஒருவர் கடத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கபட்டுவந்த நிலையிலேயே இச்சம்பவம் மேலும் யாழ்.குடாநாட்டை அதிர வைத்துள்ளது.பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர இவர் ஒரு முன்னாள் போராளியென இராணுவத்தினர் சந்தேகித்ததுடன் இவரை நலன்புரி நிலையத்தில் வைத்து கடுமையாக விசாரணை செய்யதுள்ளதும் தெரியவருவதுடன் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் இராணுவ அதிப்தியாளர்களை கொள்ளை என்ற போர்வையில் கொலைசெய்வதற்கு இராணுவப்புலனாய்வின் விசேட பிரிவினர் திட்டம் தீட்டி வருவதும்  அதனை இப்போது இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தி வருவதும் மறைக்க முடியாத ஒன்று என்பது வெளிப்படை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக