வியாழன், 24 ஜூன், 2010

சீனாவின் 25ஆயிரமும் இந்தியாவின் 30ஆயிரமும்!....

சீனா மற்றும் இந்தியாவின் அதிகாரப்போட்டி நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.
இலங்கையை ஆட்டுவிப்பது யார் என்ற போட்டிக்கு இந்த இரு அரசுகள் தவிர வேறு சக்திகளும் முட்டி மோதுவது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

சில நாட்களுக்கு முன்பு சீனா தன் நாட்டு குற்றவாளிகள் 25ஆயிரம் பேரை வேலைத்திட்டங்களுக்காக இலங்கையில் இறக்கியிருந்தது.
அதற்குப் போட்டியாக இந்தியாவும் தன்னடைய நாட்டின் வேலைத்திட்டங்களுக்காக இலங்கையில் 30ஆயிரம் பேரை இறக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
இராமேசுவரம், தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து இன்னும் 4, 5 மாதத்தில் தொடங்க இருப்பதாகவும்.
ஏனெனில் தமிழீழத்தை சூழ்ந்துள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்ற தேவையான தளவாடங்களை அடிக்கடி கொண்டு செல்லவும்.
பீகார், ஒரிசா பகுதியிலிருந்து இந்தி பேசும் 30 ஆயிரம் தொழிலாளர்களை கப்பல்களில் ஏற்றிச் சென்று குடநாட்டில் குடியமர்த்தி அவர்களது போக்குவரத்துக்குமான பயனாகவே இக்கப்பல் போக்குவரத்து இருக்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இது தமிழர்களின் நலனுக்கு இன்னல் செய்வதாக அமையப்போவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக