வியாழன், 24 ஜூன், 2010

கருணாநிதி தமிழ் தலைவனாம் அவனது புறநூற்று கதையும் அவனது தந்திரமும் ...........


உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குகிறது தமிழ் என்று புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் கருணாநிதி.
கோவையில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி சிறப்புரை ஆற்றினார்.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை தொடங்கி வைத்து கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது வழங்கி விழாப்
பேருரையாற்ற வருகை தந்திருக்கும் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி சிங் பாட்டீல் தடைக்கற்கள் பல போடப்பட்டாலும் அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டிருக்கும் பற்றின் காரணமாக வந்திருக்கும் உங்களுக்கு உலகெங்கும் தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
கோவையில் நடைபெறுகிற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு மடைதிறந்த வெள்ளமாக திரண்டு வந்திருக்கும் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவேரி தீரத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும், தஞ்சைத் தரணியில் திருக்குவளை என்ற ஊரில் முத்துவேலருக்கும், அஞ்சுக அம்மைமையாருக்கும் மகனாகப் பிறந்து 14 வயதினிலே அணிவகுப்புப் பாடல் இயற்றி தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், மீன் சின்னம் பொறித்த கொடி பிடித்து தமிழ் மாணவர் பட்டாளத்திற்கு தலைமை தாங்கி, ஆர்ப்பாட்ட, போர்ப் பாட்டுடன் பேரணி நடத்தி அதே வயதில் திராவிடர் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது, நாட்டைக் காப்பாற்றவும், கலை நாகரிகத்தைக் காக்கவும், கச்சை கட்டி நிற்கின்றனர் என்ற முன்னுரையோடு நாடகத்தை எழுதி கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்ற பாடல் வரிகளை எழுதி, பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்த்தைப் பெற்று, திராவிட நாடு தொடக்க இதழில் எழுதிய கட்டுரை, அண்ணாவின் கவனத்தை ஈர்த்து, 20 ஆவது வயதில் சேரன் என்ற பெயரோடு முரசொலியைத் தொடங்கி சீர்திருத்த சிறுகதையை வழங்கி, தந்தை பெரியாரினது அரவணைப்பிலும், அண்ணாவின் அன்பிலும் நனைந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் என பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து ஆட்சியில் இருந்தபோதும் இல்லாத போதும் தமிழன்னைக்கு பணியாற்றிய எனக்கு கோலமிகு கோவை மாநகரில் உலகத் தமிழ் செம்மொழி நடத்தவும், அதன் தொடக்க விழாவுக்கு தலைமையேற்கவும் வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.
இதற்கு முன்பு உலகத் தமிழ் மாநாடு 8 முறை நடந்துள்ளது. முன்னர் நடந்த மாநாடுக்கும், இதற்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை உலகத் தமிழ் மாநாடு இப்போது நடப்பது செம்மொழி மாநாடு. தமிழ் உலக மொழி மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது.
உலகின் பலமொழிகளில் மூலத் தாயினுடைய சொற்கள் உருத் தெரியாமல் உள்ளன. உதாரணத்திற்கு, அம்மா, அப்பா, என்னும் சொற்கள், நான், நீ, அவன் என்ற பெயர்கள், நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள், இவை எல்லாம் தமிழோடு மிகவும் நெருக்கமுள்ளதாக உள்ளன. எனவே தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்னும் பெருமை பெறுகிறது.
சாணக்கியன் தனது அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரம் குறித்துக் கூறியுள்ளான். அங்கு முத்துக் குளிப்பது குறித்துக் கூறியுள்ளான். இது தமிழின் தொன்மையைக் குறிக்கிறது. வலம்புரி இலக்கத்தணத்தில் சேர, சோழ, பாண்டியர் குறித்து கூறப்பட்டுள்ளது. பாண்டவர்களுக்கும், துரியோதனர்களுக்கும் இடையே நடந்த பாரதப் போரின்போது உதியன் சேரலாத மன்னன் பங்கேற்றது குறித்து மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
பாரதப் போர் நடந்தது கி.மு.1500 என அறியப்படுகிறது எனவே தமிழின் தொன்மையை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
சிந்துவெளி சமூக குறியீடுகளை பழந்தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். கருணாநிதி செம்மொழி விருது பெறும் பப்போலா, சிந்துவெளிப் பண்பாடும், எழுத்தும், திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறியுள்ளார். இதற்கான தகுதி ஆதாரங்களை விரிவாகக் கூறியுள்ளார்.
அகநானூறு, புற நானூறு கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் விளைவாக 2000 ஆண்டுகால தமிழ் நமக்குக் கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால் 3000 ஆண்டுக்கு முந்தைய தமிழ் கிடைத்தது. சிந்துவெளி நாகரிகம் மூலம் 5000 ஆண்டு முந்தைய தமிழ் கிடைத்துள்ளது.
தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, தாய்மைத் தன்மை, மொழிக் கோட்பாடு, இலக்கிய வளம், உயர் தனித் தன்மை, பண்பாடு, கலை உள்ளிட்ட 11 தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால் அது செம்மொழியாகும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த 11 தகுதிகள் மட்டுமல்லாமல் இதற்கும் மேலான மேன்மை பெற்றது தமிழ் என்பதை தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே உள்ள தமிழர் மட்டுமல்ல, தமிழை கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
சூரிய நாராயண சாஸ்திரி எனப்படும் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழி என்று முதலில் குரல் கொடுத்தவர் ஆவார். அதேபோல தமிழை செம்மொழி என முதலில் வெளிநாட்டவர் ராபர்ட் கால்டுவெல். அயர்லாந்து நாட்டில் பிறந்து வாழ்ந்த இவர் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் குடியேறி கடைசிக்காலம் வரை வாழ்ந்து மறைந்தவர்.
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஓங்கி ஒலித்து வந்த குரல் காற்றில் மறைந்து கடலில் கரைந்து காணப்பட்டபோது மத்தியில் தியாகத் திருவிளக்காம், சோனியா காந்தி வழிகாட்டுதலின் கீழ் மன்மோகன் சிங்கின் தலைமையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. அதன் பிறகுதான் தமிழை செம்மொழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
தமிழ் செம்மொழியாக்கப்பட்டது என்று கூறி சோனியா எனக்கு எழுதிய கடிதத்தை நாளை எனது கொள்ளுப் பேரன்கள் எடுத்துப் பார்த்து நமது தாத்தா கட்டிக்காத்த பெயர் இது என்று பெருமை கொள்ளவேண்டும்.
5000 ஆண்டுக்கும் மேலாக அழகும், இளமையும் குறையாமல் வாழ்ந்து வரும் தமிழின் எதிர்காலத் தேவைகளை குறிப்பிட்டு கணினித் தமிழ், அறிவியல் தமிழ் குறித்து வழிமுறைகளை வகுக்கவும், இலக்கியம், மொழியியல், தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியலில் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும், சிந்துச் சமவெளி நாகரிகம் முதல் இன்று வரையிலான தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் அடிப்படையில் மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள திட்டம் வகுக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது என்றார் கருணாநிதி.


தமிழனை அழிப்பதற்காக முத்துவேலுவின் மகன் கொடுத்த ஒத்துழைப்பிற்காக சோனியா கொடுத்தபரிசு தான் இந்தச் செம்மறி மகாநாடு(மன்னிக்கவும் செம்மொழி மகாநாடு) இம்மகாநாட்டை உற்று நோக்கும் போது உலகத்தமிழர்களெல்லாம் தமது தேசியத்தலைவர் என்று ஒருவரைக்கூறும்போது தன்னைத்தானே தமிழினத்தலைவன் என்று கூறிவந்த தமிழினத்துரோகி அவனது செம்மறி மகாநாட்டிற்கு முன்பே எங்கள் தேசியத்தலைவனைக் கொன்றுவிடவேண்டும் என்று துரிதகதியில்ச்செயற்பட்டானோ என்று எண்ணத்தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக