வியாழன், 24 ஜூன், 2010

சிறீலங்கா கொலைவெறி அரசின் புலனாய்வு வலையில் கே.பி யும் புலம்பெயர் தோழர்களும்

சர்வதேசத்தின் அழுத்தங்கள் இலங்கைக் கொலைவெறி அரசின் மீது அதிகரிக்க இலங்கை அரசு புலனாய்வு ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் உச்சக்கட்ட உத்திகளையும் தந்திரோபாய முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றது.இந்த உச்சக்கட்ட உத்திகளின் ஒரு அங்கமே குமரன் பத்மநாதனை வைத்து அரசு மேற்கொள்ளும் தற்போதைய நயவஞ்ச்சக நகர்வாகும்.



அண்மைக்காலமாக கே.பி பற்றிய தகவல்கள் பரபரப்பாக வெளிவந்தவண்ணமுள்ளது. போருக்குப் பின்னரான கட்டுமானப்பணிகளுக்கு உதவ புலம்பெயர் வாழ் முன்னாள் விடுதலப்புலி உறுப்பினர்கள் முன்வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதற்காக புலம்பெயர் நாடுகளான பிரித்தானியா,கனடா,சுவிற்சர்லாந்து,யேர்மனி,பிரான்ஸ்,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து9 பேர் கொண்ட குழுவினர் அண்மையில் கே.பி யின் வழிநடத்தலில் இலங்கை வந்து பாதுகாப்பமைச்சர் கோத்தபாய ராஜபக்சவையும் ஜீ.எல் பீரிசையும் சந்தித்துள்ளனர்.இச்செயல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செயற்பாடுகளின் மூலம் அரசு புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும்,கே.பி யிடம் இருந்த விடுதலைப்புலிகளுக்கு மக்கள் உவர்ந்தளித்த சொத்துக்களை தன்வசப்படுத்தியதுபோல் புலம்பெயர் தேசத்தில் உள்ள கேபி யுடன் சேர்ந்து இயங்கியவர்களிடம் இருக்கும் சொத்துக்களை கே.பி மூலமாகவே நரித்தனமாகத் தன்வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.


கே.பி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அவர்மீது இலங்கை அரசு எந்தவித சட்டநடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாகச் சிங்கள இனவெறி அரசியல்ப்பேய்கள் வடமாகாணத்தில் ஆழும் கட்சியின் சார்பாகக் கே.பியைதேர்தலில் நிறுத்தப்போவதாகவும்,கே.பிக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்போவதாகவும் அண்மையில் கெகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ந் திகதி கைது செய்யப்பட்டு 7ந்திகதி கொழும்பிற்கு அழைத்து வரப்பட்ட கே.பி மீது இன்றுவரை எந்தவித சட்டநடவடிக்கையையோ அழுத்தங்களையோ அரசு மேற்கொள்ளவில்லை. அவர் சகலவசதிகளுடனும் கொழும்பிலுள்ள விசும்பாவாவிலில் வசித்துவருகின்றார். வெளிநாடுகளுக்கும், தமிழ்ப்பிரதேசங்களுக்கும் சுதந்திரமாகச் சுற்றித்திரிகின்றார். அதுமட்டுமல்லாது கடந்தகாலங்களில் புலம்பெயர் தேசத்தில் அவருடன் சேர்ந்து இயங்கியவர்களும் அவரது சிபாரிசின் பேரில் இலங்கைக்கு சுதந்திரமாகப் போய்வருகின்றனர். இவர்களை அரசு அடுத்துவரும் மாகாணசபத்தேர்தலுக்கு தமிழ்ப்பிரதேசங்களில் தனக்கு வலுச்சேர்ப்பதற்காகப் பிரச்சாரப்பணியில் ஈடுபடுத்திவருகின்றது .


இதைவிட இலங்கை அரசிற்குப் பெரும் தலையிடியாகவுள்ள திரு.உருத்திரகுமாரனின் நாடு கடந்த தமிழீழ அரசை முடக்குவதற்காக தமிழீழ விடுதலைபுலிகளின் முன்னை நாள் வெளிநாட்டுப்பொறுப்பாளராக இருந்தவர் என்ற ரீதியில் புலம்பெயர் தமிழர்கள் கே.பியை நம்புவார்கள் எனறு நினைத்து தமிழ் மக்களை ஏமாழிகளாக்கி வெல்வதற்கான முயற்சியில் தற்போது ஜீ.எல் பீரிஸ் ஈடுபட்டுவருகின்றார்.இவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தற்போது புலம்பெயர் தேசத்தமிழர்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவென ஊனை உருக்கி உடலைவருத்தி உழைத்து தமிழீழ விடுதலைப்புலிகளையும், தேசியத்தலைவரையும் நம்பிக்கொடுத்த பணத்தில் கே.பி யிடமிருந்த பணத்தையும்,சொத்துக்களையும் தன்வசப்படுத்தியுள்ள பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தப்பணத்தில் சுமார் இரண்டுகோடி ரூபாவில் கொழும்பிலுள்ள அப்பலோ மருத்துவமனையை விலைக்கு வாங்கியதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இதன் அடுத்த கட்டமாக புலம்பெயர் தேசங்களில் உள்ள கே.பியின் தோழர்களிடமுள்ள ஏனைய சொத்துக்களையும் பணத்தையும் கேபியை வைத்தே தன்வசப்படுத்த அரசு முனைகின்றது. இந்த நரித்தன அரசியல் வலையில் விழுந்த சிலரே அண்மையில் கே.பியின் வழிநடத்தலில் இலங்கைக்குச் சென்றுவந்துள்ளனர். இதன் மூலம் சர்வதேசப் பயங்கரவாத அரசுகளின் துணையுடன் ஆயுதப்போராட்டத்தில் தமிழனை வென்றுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் அரசு புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சொத்துக்களை கே.பியை வைத்துத் தன்வசப்படுத்தி தங்களின் குடும்பச்சொத்தாக்கி இனி எந்த விதத்திலும் ஒரு போராட்டம் வெடிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டுவருகின்றது.


கடந்த காலங்களில் தனது செல்லப்பிள்ளை என்று கூறிவந்த டக்ளஸ் தேவானந்தாவை தற்போது அரசு ஓரங்கட்டிவருகின்றது,பிள்ளையானை ஒரு பொம்மை போல் வைத்துள்ளது,தமிழினத் துரோகி கருணா பிரதி மீழ் குடியேற்ற அமைச்சர் என்ற பதவிப்பிரமாணத்துடன் கையாலாகாத்தனமாகச் சுற்றிவருகின்றார். இவர்களின் வரிசையில் தற்போது அரசு கே.பியைப் பயன்படுத்தி வருகின்றது அவரும் மிகவிரைவில் செல்லாக்காசாகிவிடுவார் என்பதே உண்மை. எனவே அரசின் இந்தச்சதி நடவடிக்கைகளை மனதில் வைத்து புலம்பெயர் தேசத்தில் கடந்த காலத்தில் எம்மின விடுதலைக்காக உழைத்த செயற்பாட்டாளர்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட்டு கே.பியை வைத்து எம்மின விடுதலையை நசுக்க முற்படும் இந்தச் சதிகாரச்செயலுக்குத் துணைபோகாது உங்களையும் உங்கள் இன விடுதலையையும் பாதுகாப்பதுவே தற்போது உங்கள் முன்னுள்ள கடமைஎன்பதை விழங்கிச்செயற்படவேண்டும்.




நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக