வியாழன், 17 ஜூன், 2010

லியன்பாஸ்கோ வற்றாப்பளையில் மக்களை நேரடியாக சந்தித்தார்

முல்லைக்கு சென்ற ஐக்கிய நாடுகளின் தூதுவர் லியன் பஸ்கோ வ்ற்றாப்பளையில் குமரபுரம் மக்களை சந்தித்துள்ளார். அங்கு அவர் மக்களுடன் பேசுகையில் கோரமான போர் முடிந்துவிட்டது. நீங்கள் மீண்டும் வழமையான வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான உதவிகளை ஐக்கியநாடுகள் சபை செய்துவருகிறது என்றும் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப் பளையில் உள்ள சுகாதார நிலையத்தில் சிறு குழந்தைகளுடன் தாம் சந்தித்த தாய் மாரிடம் இவ்வாறு கூறினார் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிப் பொதுச் செயலாளர் லியன் பாஸ்கோ.


அவர் அங்கிருந்து, கூட்டுறவுச் சங்கக் கடையில் ஐ.நா. வழங்கிய உணவுப் பொருள்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதையும் பார்வையிட்டார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள லியன் பாஸ்கோ அரசியல் நல்லிணக்கம், மனித உரிமைகள் பேணப்படும் நிலைமை இடம்பெயர்ந்தோரின் மீளக்குடியமர்வு ஆகியவற்றின் நிலைமைகளைக் கண்ட றியும் பொருட்டு இலங்கை வந்துள்ளார்.


லியன் பாஸ்கோ நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் பேச்சுக்களின் போது பிரசன்னமாகி இருந்தனர்.
அவர் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழ்க்கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பத்திரிகை ஆசிரியர்களையும் சநதித்துப்பேச வுள்ளார். முல்லைத்தீவுக்கு நேற்றறுப் பிற்பகல் சென்ற பாஸ்கோ அங்கு நடைபெறுகின்ற அபிவிருத்திவேலைகள், புனரமைப்புப் பணிகள் என்பவை தொடர்பாகவும் முல் லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கேட்ட றிந்துள்ளார்.


மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார், போருக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மீள்குடி யேற்றம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அவருக்கு விளக்கியுள்ளார்.
வற்றாப்பளை, குமாரபுரம் பகுதிகளுக்குச் சென்று மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் நிலைமைகளையும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் நிலைமைகளையும் நேரடியாக லியன் பாஸ்கோ பார்த்து அறிந்துள்ளார்.
வற்றாப்பளைப் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்த அவர் அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்ததுடன் குமாரபுரம் பகுதியில் இடம்பெறுகின்ற கண்ணி வெடி அகற்றும் பணிகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடமும் எவ்.எஸ்.டி. கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரி டமும் கேட்டறிந்துகொண்டார்.
தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள் அழிவுக்குள்ளாகிய தமது வீடுகளைத் திருத்தவும் வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும் வேண்டும் என்றும் கோரியுள்ளனர். முல்லைத்தீவு பகுதிகளின் மீள் குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கை களைத் தாங்கள் தொடர்சியாகக் கவனித்து வருவதாகவும் தேவையான உதவிகளை அரசாங்கத்தின் ஊடாக வழங்கவுள்ளதாகவும் லியன் பாஸ்கோ அந்த மக்களிடம் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக