வியாழன், 17 ஜூன், 2010

சீமானின் கொள்கை சறுக்கல்?

தமிழ் இனத்தின் போர்வாள் என்று சமீபகாலமாக உணர்வாளர்களால் கொண்டாடப்படுகிறார் சீமான்.
ஆனால் அந்த வாள் அவ்வப்போது மொக்கையாகிவிடுவதும் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது அவரது சமீபத்திய முடிவொன்று! தமிழினத்தின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போய் ஆட்டம் போட்ட பாலிவுட் நடிகர்களின் படங்களை தமிழகத்தில் எங்கும் ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று முழங்கிய சீமான், தனது கொள்கையிலிருந்து வழுக்கி விழுந்திருக்கிறார். அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணத்தை அவரது தம்பிகளே ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் பெருத்த சந்தேகம்!



சூர்யாவும், விவேக் ஓபராயும் நடித்த ரத்த சரித்திரம் படத்தைதான் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போனவர்தான் இந்த விவேக் ஓபராய். அதுமட்டுமல்ல, அங்கு போய் ராஜபக்சேவின் உத்தரவை ஏற்று அங்குள்ள 52 தமிழ் ஜோடிகளுக்கு தனது தலைமையில் திருமணமும் செய்து வைத்தவர். இந்த படம் வெளிவரும்போது சீமானின் நாம் தமிழர் கட்சி செய்யப் போவது என்ன என்பது உணர்வாளர்களின் கேள்வியாக இருந்தது. இது குறித்து முன்னணி இதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் சீமான், 'தம்பி சூர்யாவுக்காக மன்னித்து இந்த படத்தை வெளியிட குறுக்கே நிற்க மாட்டேன்' என்று கூறியிருக்கிறார்.


'கொழும்பு விழாவுக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் ரத்த சரித்திரா. விவேக் ஓபராய்க்காக அந்த படத்தை எதிர்த்தால் அது என் தம்பி சூர்யாவுக்கு எதிரான போராட்டமாகிவிடும். சூர்யாவுக்காக விவேக் ஓபராயை இந்த முறை மன்னித்து அனுமதிக்கிறோம். அதே நேரத்தில் விவேக் ஓபராய் நடிக்கும் எந்த படத்தையும் தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்' என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் சீமான்.
விவேக் ஓபராய் நடிக்கப் போகும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்கக் கூடும். தம்பி மாதவனுக்காக ஒருமுறை மன்னிப்பார் சீமான். அந்த படத்திற்கு அடுத்த படத்தில் விவேக் ஓபராயுடன் கஞ்சா கருப்பு நடிக்கக் கூடும். தம்பி கருப்புவுக்காக இன்னொரு முறை மன்னிப்பார் சீமான். காலப்போக்கில் விவேக் என்ற தமிழ் நடிகரின் பெயரில் பாதியை வைத்திருப்பதற்காக ஒரு முறை அந்த தம்பியை மன்னிப்பார் சீமான்.... ஆஹா என்னே ஒரு கொள்கை பிடிப்பு!

1 கருத்து:

  1. இதே தலைவன் சீமானுக்குதானே, நாம் ஈழத்து முட்டாள்கள் பண்ம் கூட சேர்த்து அனுப்புகிறார்கள்! நீங்கள் இருந்து பாருங்கள், நெடுமாறன், வைகோ போன்றோரின் முகத் திரை விரைவில் கிளியும்! ஈழ விடுதலை போராட்டம் இல்லாவிடில், நெடுமாறனின் அன்றாட வாள்கைகே வழி இல்லாமல் போய்விடும்.

    பதிலளிநீக்கு