வியாழன், 17 ஜூன், 2010

புலனாய்வு கட்டமைப்பு,,.............?

ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய உளவுபார்க்கும் பொறுப்பு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதி பாதுகாப்புபிரிவின் பொறுப்பதிகாரியான ஜகத் அல்விஸ் அண்மையில் இராணுவப்புலனாய்வு பிரிவுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஜகத் அல்விஸ், முன்னாள் கூட்டுப்படைத் தலைமையதிகாரி சரத் பொன்சேக்கா தொடர்பில் வெற்றிகரமான உளவு பணிகளை மேற்கொண்டதன் காரணமாக ஜனதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் பாராட்டை பெற்ற அதிகாரியாவார்.


தொலைபேசிகளை ஒட்டுகேட்டல், மின்னஞ்சல்களை இரகசியமாக வசித்தல், செய்மதி உள்ளிட்ட அனைத்து வகையான தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கக் கூடிய தொழிற்நுட்பம் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் உள்ளது. உலகில் தற்போது பயன்படுத்தப்படும் நவீன அதியுயர் தொழிற்நுட்பத்திலான கருவிகளை இராணுவப்புலனாய்வு பிரிவினர் கொண்டுள்ளனர். தொலைபேசி உரையாடல் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஒருவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிதல், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் இலங்கை இராணுவப்புலனாய்வுப் பிரிவு தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த யுத்த கால கட்டத்தில் இதனை இலங்கை இராணுவம் பயன்படுத்தியிருந்தது.


இந்தநிலையில் ஆளும் கட்சியினர் குறித்து உளவு தகவல்களை திரட்டுவத்றகாக லெப்டினட் கேணல் ஒருவர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கான புலனாய்வு அதிகாரிகளை முன்னாள் இராணுவப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரணவே தேர்வு செய்துள்ளார். ஹெந்தாவிதாரண தற்போது பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.


அரசியல்வாதிகள் தொடர்பான உளவு பணிகளை அரச புலனாய்வுப் பிரிவினரே இதுவரை மேற்கொண்டு வந்தனர். காவற்துறை மா அதிபர் தலைமையில் இயங்கும் இந்த புலனாய்வுப் பிரிவின் காவல்துறை அதிகாரிகளில் சிலர் அமைச்சர்களிடம் இரகசிய தகவல்களை வெளியிடுவதுடன் அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதால், அரசியல்வாதிகள் தொடர்பான புலனாய்வு தகவல்களை திரட்டும் பணிகள் இராணுவப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக