திங்கள், 28 ஜூன், 2010

கே.பி க்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக கூறமுடியாது.....

புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கொளவனவாளரும் பிரபாகரனின் மரணத்தின் பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி கொண்டவருமான கே.பி க்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தற்போதைக்கு எதுவும் திடமாக கூறமுடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.



கே.பி க்கு எதிரான சில விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறியுள்ள அவர், அவ்விசாரணைகள் முடிவதற்கு முன்னர் கே.பி க்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பாக எதுவும் கூறமுடியாதுள்ளதாகவும் கூறியுள்ளார்.


குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடன் புலம்பெயர் தமிழ் பிரமுகர்களை இணைத்துக்கொள்வதற்கு கே.பி மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கே.பி – மஹிந்த அரசின் கூட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதுடன் பல அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்பலைகள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக